Biggboss Tamil Season 5 | பிக்பாஸ் சீசன் 5-இல் பங்கேற்க தனிமைப்படுத்தப்பட்ட 5 பிரபலங்கள்... யார் யார் தெரியுமா? வைரல் ஃபோட்டோஸ்..
ப்ரோமோவில் அக்டோபர் 3 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கநிகழ்வு நடைபெறும் அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 5-இல் யாரெல்லாம் பங்கேற்கவுள்ளார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகளவில் இருந்த- நிலையில், தற்போது போட்டியில் பங்கேற்பதற்காக தனிமைப்படுத்தப்பட்ட 5 பிரபலங்கள் தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகிவருகிறது.
மக்கள் பல எதிர்மறைக்கருத்துகளைத் தெரிவித்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு கடந்த 2017-ஆம் ஆண்டு வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகிக்கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. சீசன் 1 ல் போட்டியாளர்களிடையே ஏற்பட்ட நட்பு, காதல், சண்டை சச்சரவுகள் எதற்கும் பஞ்சம் இல்லாமல் நான்கு சீசன்கள் நடந்துமுடிந்துள்ளது. இந்நிலையில் சீசன் 5 எப்போது வெளியாகும்? இதன் போட்டியாளர்கள் யார் யார் என்ற கேள்விகள் கடந்த சில மாதங்களாகவே அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றாக உள்ளது.
இந்த சூழலில் தான் வழக்கம் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் இந்நிகழ்ச்சிகள் இந்தாண்டு பல்வேறு வித்தியாசமான ப்ரோமக்கள் எல்லாம் வெளியானது. இதில் கடைசியாக வெளியான ப்ரோமோவில் அக்டோபர் 3 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கநிகழ்வு நடைபெறும் அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர். இருந்தபோதும் யார் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் என்ற ஆர்வம் அனைவரிடம் எழுந்த நிலையில்தான், குக்வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி, நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா, நடிகை ஷகிலாவின் மகள் திருநங்கை மிலா, பாபா பாஸ்கர், இமான் அண்ணாச்சி, விஜே பப்பு உள்ளிட்ட பலர் கலந்துகொள்வார்கள் என்ற பெயர்கள் அனைத்தும் இடம் பெற்றது. இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகமல் இருந்தது. ஆனால் 20 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சிக்காக பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து 16 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்னதாக போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். தற்போது நட்சத்திரங்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளனர். அதில் மிலா, கோபிநாத் ரவி, ஷாலு ஷாமு, கண்மணி உள்ளிட்டோர் உள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது ஒரு வாரம் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இவர்கள்தான் பிக்பாஸ் சீசன் 5-இல் கலந்துகொள்ளவுள்ள நபர்கள் என்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மற்ற போட்டியாளர்கள் யார் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
ஏற்கனவே குக் வித் கோமாளியில் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்த ஷகிலாவின் வளர்ப்பு மகள் திருநங்கை மிலா இந்தப்போட்டியில் பங்கேற்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த சீசன் 5-இல் தொழிலதிபரான ரேணுகா பிரவீன் என்பவர் கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இத்தகைய பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தான் பிக்பாஸ் சீசன் 5-க்கான படப்பிடிப்பு ஈவிபி பிலிம் சிட்டியில் சனிக்கிழமை தொடங்கவுள்ளது. எனவே இந்தாண்டும் வழக்கம் போல அனைவரையும் மகிழ்விக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.