Bigg Boss Tamil 9: பிக்பாஸ் வீட்டில் வாட்டர்மெலன் ஸ்டார்... வந்த உடனே வாங்கிக் கட்டிய பரிதாபம்!
உள்ளே செல்லும் பழைய போட்டியாளர்கள் வெளியில் என்ன நடந்தது என்பதைப் பற்றி சொல்லக்கூடாது என்பதில் விதிமுறை உள்ளது. இந்த நிலையில் உள்ளே இருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் திவாகர் ஒரு விஷயத்தை சொல்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பழைய போட்டியாளர்கள் திரும்பி வரும் நிலையில் கடைசி வாரம் களைக்கட்டியுள்ளது. இதில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் அடங்கிய ப்ரோமோ வைரலாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2025, அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியானது 2026, ஜனவரி 18ம் தேதியுடன் நிறைவடையுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 20 நேரடி போட்டியாளர்கள், 4 வைல்ட் கார்டு போட்டியாளர்களுடன் சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 6 பேர் மட்டுமே உள்ளனர். கானா வினோத், திவ்யா, சபரி நாதன், விக்கல்ஸ் விக்ரம், அரோரா, சாண்ட்ரா ஆகிய 6 பேரும் இருக்கின்றனர்.
இதில் அரோரா டிக்கெட் டூ பினாலி டாஸ்க் வென்று நேரடியாக இறுதிப்போட்டிக்கான தகுதி பெற்றிருக்கிறார். மற்ற 5 பேர் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் கடைசி வாரத்தை கலகலப்பாக மாற்ற முன்னாள் போட்டியாளர்களை மீண்டும் வரவழைத்துள்ளனர். அதன்படி வியானா, இயக்குநர் பிரவீன் காந்தி, வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் ஆகியோர் உள்ளே வந்துள்ளனர்.
வாங்கி கட்டிய வாட்டர்மெலன் ஸ்டார்
உள்ளே செல்லும் பழைய போட்டியாளர்கள் வெளியில் என்ன நடந்தது என்பதைப் பற்றி சொல்லக்கூடாது என்பதில் விதிமுறை உள்ளது. இந்த நிலையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களிடம் திவாகர், “தங்கம் சொல்ல மறந்துட்டேன். எல்லா வருஷமும் இல்லாமல் இந்த வருஷம் லைவ் நல்லா போச்சாம். அதுக்கு வாட்டர் மெலன் ஸ்டார் உள்ளே இருந்தது தான் காரணமாம். எல்லா ப்ரோமோலயும் நான் இருந்தேன்” என தற்பெருமை பேசினார். இதனைக் கேட்ட வியானா, “உங்களிடம் ஒன்றுமே சொல்லி அனுப்பவில்லையா, நான் மட்டுமே எதுவும் பேச முடியாமல் இருக்கிறேன். நீ எல்லாமே பேசுகிறாயே?” என கேள்வியெழுப்புகிறார்.
#Day93 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) January 6, 2026
Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/4KhYKBPTvD
இதனைக் கேட்டு திவாகர் ஷாக் ஆகிறார். உடனே பேசும் பிக்பாஸ், “திவாகர் வெளியுலக விஷயங்களைப் பேசாதீங்க. அதையும் மீறி பேசுவேன்னு சொன்னீங்கன்னா, வலது பக்கம் 3 கேமரா தெரியும். அதுக்கு நடுவுல வெளியில போகுற மெயின் டோர் இருக்கும். அது வழியா வெளியே போகலாம்” என சொல்லிடுவேன் என கறாராக சொல்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.





















