BiggBoss Tamil 9 : விஜே பார்வதியை திருமணம் செய்யப்போகும் கமருதின் ? நேத்து ராத்திரி என்னதான் நடந்தது
Biggboss tamil 9 : விஜே பாருவை திருமணம் செய்துகொள்வதாக கமருதீன் கையில் அடித்து சத்தியம் செய்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. 74 ஆவது நாளை நிகழ்ச்சி எட்டியுள்ள நிலையில் விஜே பார்வதி மற்றும் கமருதீன் இடையில் ஏதோ நடக்கக் கூடாத ஒன்று நடந்திருப்பதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள். இதுமட்டுமில்லாமல் விஜே பார்வதியை திருமணம் செய்துகொள்வதாக கமருதின் சத்தியம் செய்தது இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசன் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. கடந்த வாரம் ரம்யா மற்றும் வியானா பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டார்கள். விஜே பாரு , அரோரா , கனி , கமருதின் , சபரி , விக்ரம் , சாண்ட்ரா , அமித் , கானா வினோத் உள்ளிட்ட போட்டியாளர்கள் கிராண்ட் ஃபினாலேவை நோக்கி நகர்கிறார்கள்.
பிக்பாஸ் வீட்டைப் பொறுத்தவரை தற்போது விஜே பாரு மற்றும் கமருதீன் மேல் தான் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் குவிந்துள்ளது. இருவரும் ஜோடி போட்டுக்கொண்டு மற்ற போட்டியாளர்களை வெற்றுப்பேற்றுவது , பிக்பாஸ் கட்டளையை மீறி மைக்கை கழற்றி வைத்து சுத்துவது , காதல் லீலைகள் புரிவது என பல சேட்டைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த சேட்டைகளின் உச்சமாக தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விஜே பார்வதியை திருமணம் செய்வதாக கூறிய கமருதின்
விஜே பார்வதி மற்றும் கமருதின் பேசும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பார்வதி முகம் வாடிய நிலையில் சோகமாக அமர்ந்திருக்க கமருதின் அவரை சமாதானப் படுத்துகிறார். 'இப்போ நாம் போட்டியில் கவனம் செலுத்த வேண்டும் வெளியே போனதும் என்ன நடந்தாலும் நாம சேர்ந்து சந்திக்கலாம்.' என பார்வதியின் கையில் அடித்து கமருதின் சத்தியம் செய்கிறார். " இது எங்க அம்மாவிற்கு தெரிந்தால் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் " என பாரு சொல்ல " கமருதின் 'அம்மா கேட்டா கல்யாணம் பண்ணிப்பான்னு சொல்லிடு' என்று அவரை சமாதானப்படுத்துகிறார். மேலும் 'உனக்கு வயசும் 29 ஆகிடுச்சுல இது கல்யாணத்துக்கு சரியான வயசுதான் ' என கமருதின் பாருவிடம் சொல்ல பாரு ' எனக்கு என் அம்மா என்ன நினைப்பார் என்பது மட்டும்தான் கவலையாக இருக்கு' என சொன்னதையே திருப்பி சொல்கிறார்
நேற்று இரவு என்ன நடந்தது ?
இப்போது ஒட்டுமொத்த ரசிகர்களின் கேள்வியும் பாரு இந்த நிலைமையில் இருக்கும் அளவிற்கு நேற்று இரவு அப்படி என்ன நடந்தது. நேற்று இரவு திடீரென்று ஏன் நாய் குரைத்தது , நடு ராத்திரியில் பார்வதி தனது வீட்டிற்கு போவதாக ஏன் சொன்னார் " என பல கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளார்கள்.
பிக்பாஸ் வீட்டில் நேற்று இரவு என்ன நடந்தது ?
ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களின் கேள்வியும் தற்போது





















