![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bigg Boss 6 Tamil Contestant: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஷிவானியின் ரீல் ஜோடி!
Bigg Boss Season 6 Contestant : போன முறை கோட்டை விட்ட சீரியல் நடிகர் இம்முறை பிக்பாஸ் களத்தில் இறங்குகிறார்
![Bigg Boss 6 Tamil Contestant: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஷிவானியின் ரீல் ஜோடி! Bigg Boss Season 6 Contestant name leaked Serial Actor Azeem to participate this season Bigg Boss 6 Tamil Contestant: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஷிவானியின் ரீல் ஜோடி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/07/cb19ee6335be24f9bdf805567e0e66541665130777974102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் ஷிவானி 4-வது சீசனில் களமிறங்க, அவரின் ரீல் ஜோடி முகமது அஸீம் இம்முறை போட்டியில் பங்குபெற உள்ளார் என்ற தகவல் வெளியாகவுள்ளது.
இன்னும் இரண்டு நாட்களில் துவங்கவிருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்காக பல ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். நிகழ்ச்சியின் துவக்க விழாவில், போட்டியில் பங்குபெரும் நபர்கள் ஒவ்வொன்றாக அறிமுகமாவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பாக்கும் அந்த தனியார் தொலைக்காட்சி, போட்டியாளர்கள் குறித்த அதிகாரபூர்வமான தகவலை வெளியிடும் முன்னரே, அதைக்குறித்த பல தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி விடும்.
அந்தவகையில், பிரியமானவளே நாடகத்தில் பிரபா கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமாகி பின்னர், பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், பூவே உனக்காக ஆகிய சீரியல்களிலும் நடித்தார்.
View this post on Instagram
பகல் நிலவு சீரியலில், ஷிவானி - அசீம் ஜோடிக்கு பல ரசிகர்கள் உண்டு. அவர்களின் கெமிஸ்ட்ரியும் அழகாக அமைந்திருக்கும். கடந்த சீசனில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்துகொள்ளவிருந்தார் அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. சில காரணங்களால் கடைசி நிமிடத்தில், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்குபெரும் வாய்ப்பினை இழந்தார்.
இம்முறை, பிக் பாஸ் நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சியில் ஒரு மணி நேர தொகுப்பையும், ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரலை காட்சியையும் காணலாம்.
Big Boss 6 Tamil begins from October 6th. pic.twitter.com/6fNW8RAvxO
— Cinematics (@cinematics_off) September 29, 2022
இந்த சீசனில் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன், சுசித்ராவின் முன்னள் கணவர் கார்த்திக்குமார், சூப்பர் சிங்கர் ராக லெட்சுமி, இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி மோனிகா, தொகுப்பாளினி டிடி, பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சீரியல் நடிகை ஸ்ரீநதி, குக் வித் கோமாளி தர்ஷா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க : ‛வீடு ரெடி..வீரர்கள் ரெடி.. வேட்டையாட நீங்க ரெடியா?’ கர்ஜிக்கும் பிக்பாஸ் கமல்!
Ram Setu Trailer update: புதிய போஸ்டர்... ட்ரெய்லர் தேதி... ‛ராம் சேது’ அப்டேட் கொடுத்த லைகா!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)