மேலும் அறிய

Bigg Boss 5 Tamil Promo: “வீடும் பெருசு... கலாட்டாவும் பெருசு” - வெளியானது பிக் பாஸ் ப்ரோமோ!

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டையும், சர்ச்சைகளும் அதிகமாக இருப்பது வழக்கம்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது, இதுவரை நான்கு சீசன்கள் வெளியாகியுள்ளன. 

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே வழக்கமாக சண்டையும், சர்ச்சைகளும் அதிகம் இருக்கும். அந்த வரிசையில், இப்போது வெளியாகி இருக்கும் பிக் பாஸ் ப்ரோமோவிலேயே, “வீடும் பெருசு... கலாட்டாவும் பெருசு” என கமல் தெரிவிப்பது போல வசனம் வருகின்றது. அதனால், சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமிருக்காது என சொல்லாமல் சொல்லியுள்ளது பிக் பாஸ் குழு. 

இந்நிலையில், ஐந்தாவது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ஆயத்த பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டது. போட்டியாளர்கள் யார், யார் என்பதில்தான் உறுதியான தகவல்கள் வெளியாகாமல் இருந்தது. டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தது. 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு சென்னை, பூந்தமல்லியில் உள்ள பிரம்மாண்ட அரங்கில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், டிக்டாக் புகழ் ஜி.பி. முத்து தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஜி.பி.முத்து, பூந்தமல்லியில் பிக்பாஸ் படப்பிடிப்பு நடைபெறும் அரங்கத்தின் முன்பு நின்று கொண்டு போஸ் கொடுப்பது போல உள்ளது. ஆனால்,  இது குறித்த அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும், குக் வித் கோமாளி புகழ் கனி, திரு, புகழ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ரக்ஷிதாவுடன் ஜோடியாக நடித்த இர்பானும் இந்த போட்டியில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் பல்வேறு நபர்களின் பெயர்களும் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளதாக வெளியாகி வருகிறது. 

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படும் என்ற தகவல் மட்டும் வெளியாகியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
Jana Nayagan: ஜனநாயகன் ரிலீஸ்.. திருவிழா போல கொண்டாடணும்.. அமைச்சர் ஆனந்த் உத்தரவு!
Jana Nayagan: ஜனநாயகன் ரிலீஸ்.. திருவிழா போல கொண்டாடணும்.. அமைச்சர் ஆனந்த் உத்தரவு!
அருள்நிதியின் 'அருள்வான்' எப்படி இருக்கிறது? விமர்சனம் இதோ
அருள்நிதியின் 'அருள்வான்' எப்படி இருக்கிறது? விமர்சனம் இதோ

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!
Yamaha EC-06 Review: ஒரே சார்ஜில் 169 கிமீ மைலேஜ்; யமஹா EC-06 செயல்திறன் சோதனையில் ஜெயித்ததா.? இதோ ரிவ்யூவ்
ஒரே சார்ஜில் 169 கிமீ மைலேஜ்; யமஹா EC-06 செயல்திறன் சோதனையில் ஜெயித்ததா.? இதோ ரிவ்யூவ்
Lexus LM 350h Review: விமானமே தோத்துரும்..முதல்வர் விஜயின் Most Fav, சொகுசின் உச்சம்- லெக்சஸ் சாரில் இவ்ளோ அம்சங்களா?
Lexus LM 350h Review: விமானமே தோத்துரும்..முதல்வர் விஜயின் Most Fav, சொகுசின் உச்சம்- லெக்சஸ் சாரில் இவ்ளோ அம்சங்களா?
Russia Crude Oil Tariff: ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல்; இந்தியா மீது 100% வரி விதிக்குமா அமெரிக்கா.? வெளியுறவு அமைச்சகம் பதில்
ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல்; இந்தியா மீது 100% வரி விதிக்குமா அமெரிக்கா.? வெளியுறவு அமைச்சகம் பதில்
Embed widget