Biggboss Amir | வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதே அமீரின் ஆசை..! பெரியம்மா உருக்கம்
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதே அமீரின் ஆசை என்று அவரது பெரியம்மா விக்டோரியா உருக்கமாக கூறியுள்ளார்.
ஏபிபி நாடு வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.
தமிழ்நாட்டில் பிக்பாஸ் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த தொடரின் 5வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அமீர் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். இந்த நிலையில், தனியார் யூ டியூப் நிறுவனத்திற்கு ஊட்டியில் வசிக்கும் அமீரின் பெரியம்மா விக்டோரியா பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
“ அமீர் ரொம்ப நல்லவரு. கல்லூரி செல்வதற்கு கூட போதியளவு பணம் கிடையாது. நான் குறைவான சம்பளமே வாங்கினேன். அதில் போயிட்டு வந்துவிடுவார். என்னை எந்த கஷ்டமும் அவர்படுத்தியதில்லை. என்னை ரொம்ப நல்லாவே பார்த்துக்கொண்டார். அமீர் எப்போதும் முன்வைத்த காலை பின்வைத்ததில்லை.
அமீர் பிக்பாஸ் இறுதி போட்டியாளராக தேர்வாகியிருப்பதை பெரிய விஷயமாக பார்க்கிறேன். அவர் பணத்தை எல்லாம் பெரிதாக நினைக்கக் கூடிய பையன் கிடையாது. வெற்றி பெற வேண்டும் என்பது மட்டும்தான் அவரது ஆசை. எல்லாவற்றிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே ஆசை. அமீர் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்.
அவன் பெரிய ஆளாக வருவான் என்று எங்களுக்கு தெரியும். இதையெல்லாம் பார்ப்பதற்கு அவன் அம்மாத உயிருடன் இல்லை. அம்மா இறந்த பிறகு என்கூடதான் இருந்தாரு. மிலிட்டரியில் சேர வேண்டும் என்று அவர் படித்தார். அவரது அம்மாவின் ஆசைக்காக அவர் நடனத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நான் அறிவுரை கூறும் அளவிற்கு அவர் நடந்துகொள்ள மாட்டார். என்னை மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்வார்.
அமீருக்கு செடி வளர்ப்பது மிகவும் பிடிக்கும். எங்கிருந்தாலும் செடி வளர்ப்பார். பறவைகளுடன் மிகவும் நெருக்கமாக இருப்பார். பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாரும் அமீரைப் பார்த்து நல்லா விளையாட்றாரு என்று கூறுவார்கள். நல்லா விளையாடிட்டு வெளியே வா அமீர். கால்வலி இருக்கிறது. கால்வலியை பத்திரமா பார்த்துக்கொள். “
இவ்வாறு அவர் கூறினார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரலை இதோ...
மேலும் படிக்க : கடைசி வாரத்துல சூர மொக்கை.. பாஸு.. என்ன பிக்பாஸ் இது? கலாய்த்து தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்