Watch video : ”வெல்கம் பேக் பாவனா “ : கெத்தாக மேடைக்கு பாவனா.. கேரள அரசுக்கு குவியும் வாழ்த்து
இந்த விழாவில் நடிகர் திலீப் முன்வரிசையில் அமர்ந்திருந்தார் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.
கேரளாவில் சர்வதேச திரைப்பட விழா நேற்று துவங்கியது. இதில் மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி , மோகன்லால் உள்ளிட்ட பல முக்கிய மற்றும் முன்னணி பிரபலங்கள் பங்கேற்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் துவங்கிய விழாவில் நடிகை பாவனா சர்ப்ரைஸ் கெஸ்டாக அழைக்கப்பட்டிருந்தார். விழா மேடைக்கு வந்த பாவனாவை , கேரளாவில் அனைவருக்கும் பிடித்தமான நடிகை , போராட்டத்தில் பெண்களின் பிரதிநிதியாக அறியப்படும் பாவனாவை வரவேற்கிறோம் “ என்றதும் அரங்கமே கர கோஷத்தால் சில நிமிடங்கள் அதிர்ந்தது.
Heart is so full watching Bhavana enter the stage amidst thunderous applause :")#IFFK #IFFK2022 #InternationalFilmFestivalOfKerala pic.twitter.com/NLBosmbuE4
— The Women Of Cinema (@thewomenfcinema) March 18, 2022
பாவனா வருவது குறித்த அறிவிப்புகள் , விழா பட்டியலில் இடம்பெயராத நிலையில் இது அங்கிருந்த நடிகர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்பதில் சந்தேகமே இல்லை. மேடையில் முக்கிய விருந்தினர்களோடு அமர வைத்து பாவனா கௌரவப்படுத்தப்பட்டார். விழாவில் பேசிய கேரள கலாசாரத் துறை அமைச்சர் ஷாஜி செரியன் (Saji Cherian) "கேரளாவின் ரோல் மாடல் நீங்கள்தான் பாவனா" என உற்சாக வரவேற்பு அளித்தார்.
View this post on Instagram
பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் அறிமுகமானார். குறைவான படங்களில் நடித்திருந்தாலும் கூட , இன்றளவும் தமிழில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம். கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப், கூலிப்படைகளை ஏவி பாவனாவை பாலியல் ரீதியா துன்புறுத்தினதாக மிகப்பெரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்படு , அது சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த வழக்கில் திலீப் கிட்டத்தட்ட 85 நாட்கள் சிறையில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சனை பாவனாவிற்கு உளவியல் ரீதியிலான பல பிரச்சனைகளை ஏற்படுத்தியது. அதனால் சிறிது காலம் சினிமா , சமூக வலைத்தளம் என பிரேக் எடுத்துக்கொண்டவர். 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் கம்-பேக் கொடுக்க இருப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில்தான் கேரள அரசு , திரைப்பட விழாவில் பாவனாவை முக்கிய விருந்தினராக அழைத்து கௌரவப்படுத்தியுள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்த விழாவில் நடிகர் திலீப் முன்வரிசையில் அமர்ந்திருந்தார் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.