Rajinikanth : "நான் ரஜினியை பெருசா எடுத்துக்கல.. அவருக்கு சாப்பாடு கூட தரல.." மனம் திறந்த பாரதிராஜா..
”ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுத்தது இல்லை. 16 வயதினிலே படத்தில் நடிக்கும் போது ஹீரோவாக இருந்த கமலுக்கு ரூ.35,000 சம்பளம் கொடுக்கப்பட்டது. வில்லனாக நடித்தாலும் ரஜினிக்கு ரூ.5000 மட்டுமே கொடுக்கப்பட்டது”
16 வயதினிலே படத்தில் நடிக்கும்போது ரஜினிக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும், அவருக்கு ரூ.5000 மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் வில்லனாக அறிமுகமானார். சிறிய கேரக்டரில் நடித்து வந்த ரஜினி தனது நடிப்பின் காரணமாக இன்று சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார். ரஜினி சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் ஹீரோவாக இருந்தவர் கமல்ஹாசன்.
இருவரும் இணைந்து நடிக்கும் படங்களில் கமல்ஹாசன் ஹீரோவாகவும், அவருக்கு வில்லனாக ரஜினியும் நடித்துள்ளனர். ஒருகட்டத்தில் இருவரும் தனித்தனியாக நடித்தால்தான் முன்னேற முடியும் என்ற முடிவெடுத்து தனித்தனி படங்களில் தங்களுக்கான வழியில் நடிக்கத் தொடங்கினர். அதன்படி ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராகவும், கமல்ஹாசன் உலக நாயகனாகவும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆரம்ப காலக்கட்டத்தில் கமலுடன் ரஜினி நடித்த அனுபவங்களை பிரபல இயக்குநர் பாரதிராஜா பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக பாரதிராஜா அளித்த நேர்க்காணல் ஒன்றில், ”ரஜினி, கமல், ஸ்ரீதேவி இணைந்து நடித்த படம் 16 வயதினிலேயே. அப்போது சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வந்த கமல் ஹீரோவாக இருந்தார். ரஜினி அப்போது தான் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். அதனால், நான் ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுத்தது இல்லை. 16 வயதினிலே படத்தில் நடிக்கும் போது ஹீரோவாக இருந்த கமலுக்கு ரூ.35,000 சம்பளம் கொடுக்கப்பட்டது. வில்லனாக நடித்து இருந்தாலும் ரஜினிக்கு ரூ.5000 மட்டுமே கொடுக்கப்பட்டது. ஹீரோ, ஹீரோயின்களுக்கு உணவு, அவர்கள் தங்கும் இடம் எல்லாம் பார்த்து பார்த்து செய்தோம். ஆனால், ரஜினியை கண்டு கொள்ளவில்லை.
ரஜினி அதை பெரிதாகவும் எடுத்து கொள்ளவில்லை. தனது போக்குவரத்து, தங்குமிடம், உணவு உள்ளிட்ட எது குறித்தும் எங்களிடம் கேட்கவில்லை. அவர், அர்ப்பணிப்புடன் படப்பிடிப்புக்கு வந்து நடித்து கொடுத்தார். ரஜினியின் அந்த குணம்தான் இன்று அவரை சூப்பர் ஸ்டாராக உயர வைத்துள்ளது” என பேசியுள்ளார்.
1977-ஆம் ஆண்டு வெளிவந்த 16 வயதினே படத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி, கவுண்டமணி, காந்திமதி, சத்யஜித் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 16 வயது சின்ன பெண் தனது வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதை கதையாக கொண்டு 16 வயதிலேயே படம் எடுக்கப்பட்டது. சூப்பர் ஹிட் கொடுத்த இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: பாரம்பரிய குடும்பமா? இது என்ன கலாச்சாரம்? பிரதீப்புக்கு ஆதரவாக நிக்ஸன் - ஐஷூவை வறுத்தெடுக்கும் விசித்ரா!