"பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்காது… காரணம் இருக்கு…" மேடையில் போட்டுடைத்த ரஜினி!
"எம்ஜிஆர் ரொம்ப டென்ஷனா இருந்தா பாரதிராஜா சாரை கூப்பிட்டு தான் பேசுவார். மணிக்கணக்கா பேசுவார். ரெண்டு பேரும் கொஞ்சி குலாவுவார்கள்"

பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றவர்கள் வந்தபிறகுதான் தமிழ் திரையுலகம் தமிழகத்தின் அப்பட்ட கிராமங்கள் திரைக்கு வந்தது, அதில் மிக முக்கியமானவர் பாரதிராஜா, அவரின் எல்லா படங்களும் மண் வாசம் மிக்கது. சூப்பர்ஸ்டார் ரஜினி பாரதிராஜா நட்பு பல தசாப்தங்கள் தாண்டியது. இவ்வளவு ஆண்டுகளில் அவர்களுக்கிடையில் சண்டைகள், கருத்து வேறுபாடு, புரிதல், அன்பு எல்லாம் நிறைந்துள்ள உற்ற நண்பர்கள். இவ்வளவு வயதாகியும் இன்னும் தமிழ் சினிமாவில் உழைத்துக்கொண்டிருக்கும் பாரதிராஜா குறித்து ரஜினி ஒரு மேடையில் பேசி உள்ளார்.
என்றும் இளமை..
அவர் பேசுகையில், "நான் ரொம்ப வருஷம் முன்னாடி வரைக்கு அவரை பாரதி பாரதின்னு தான் கூப்டுட்டு இருந்தேன். அப்புறம் இளையராஜா கூப்பிட்டு அவர் வயசு சொன்னாரு. அவருடைய உண்மையான வயச சொன்னா கையெடுத்து கும்பிட்டு சாஷ்டாங்கமா கால்ல விழுவீங்க. ஆனாலும் எப்படி இவ்வளவு இளமையா வெளில தெரியுறாருன்னா, ரெண்டு காரணம். ஒன்னு, அவர் பிறந்து வளந்ததெல்லாம் இந்த மதுரை மண்ணுல. இந்த பட்டிக்காட்டுல வளந்து, அவங்க அம்மா கையாள அந்த சத்தான உணவை சாப்பிட்டு இப்படி இருக்கார். ரெண்டாவது, அவர் இருக்குறது சினிமாவுல. சினிமால தன் க்ரியேட்டிவிட்டிய இளமையா வச்சுக்க அவரும் இளமையா இருந்துட்டே இருக்கார்", என்றார்.

பிடிச்ச வேலையை செய்றார்
அவரது சினிமா வாழ்வை பற்றி பேசிய அவர், "நாம எப்போவுமே இளமையா இருக்க இளமை காலத்துல பயங்கரமா உழைக்கணும். முதுமை காலத்துல பிஸியா இருக்கணும். அது ரெண்டையுமே அவர் செய்றார். அவருக்கு புடிச்ச சினிமா தொழில பிடிச்சு செஞ்சுகிட்டே இருக்கார். அதனால தான் அவர் அவ்வளவு பெரிய கலைஞன்" என்று கூறினார்.
எம்ஜிஆர் உடனான நட்பு
எம்ஜிஆர் உடனான பாரதிராஜாவின் நட்பு குறித்து பேசிய போது, "எம்ஜிஆர் ரொம்ப டென்ஷனா இருந்தா பாரதிராஜா சாரை கூப்பிட்டு தான் பேசுவார். மணிக்கணக்கா பேசுவார். ரெண்டு பேரும் கொஞ்சி குலாவுவார்கள். என்னய்யா எந்த ஹீரோயினையும் லவ் பண்ணலையான்னு கேட்பார் எம்ஜிஆர், அந்த அளவுக்கு ஓப்பனா பேசிக்க கூடிய ஆட்கள்", என்றார்.

பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்காது
தன்னை பற்றி அவர் என்ன நினைப்பார் என்று பேசுகையில், "பாரதிராஜா சார எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்கு என்ன பிடிக்கும் ஆனா பிடிக்காது. பழைய நேர்காணல் ஏதாவது எடுத்து பாத்தா, ரஜினி சார பத்தி என்ன நினைக்குறீங்க. 'நல்ல மனிதர்'ன்னு சொல்லுவார். ஒரு கலைஞரா எப்படி பாக்குறீங்கன்னு கேட்டாலும், 'நல்ல மனிதர்' என்பார். அப்படி என்னை ஒரு நல்ல நடிகராக ஏற்றுக்கொண்டதே இல்லை. எப்போதுமே அவர் பாக்குற பார்வைல எனக்கு ஒரு விஷயம் புரியும், நானும்தான் ஹீரோவா நடிச்சேன், என்னை எத்துக்கவே இல்ல, உன்னை எப்படியா எத்துக்கிட்டாங்கன்ற மாதிரியே என்னை பாப்பார் அவர்" என்று கூறி முடித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















