Bharathi kannamma: அப்பாடா! பாரதி கண்ணம்மாவில் ஒரு சந்தோஷ ட்விஸ்ட்! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லட்சுமி!
பாரதி கண்ணம்மா தொடரில் லெட்சுமி தனது அப்பா யார் என்று கண்டறியும் விதமாக ப்ரோமோ வெளியாகி உள்ளது.
விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்று. பாரதி கண்ணம்மா. இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. பாரதி கண்ணம்மா இருவரும் எப்போது ஒன்று சேர்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்ப்பது ஒரு புறம் இருந்தாலும், லட்சுமி தனது அப்பா யார் என்பதை எப்போது தெரிந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒருபக்கம் ஹேமாவும் தனது அப்பா பாரதிக்கு திருமணம் செய்தே ஆக வேண்டும் என்ற நினைப்பில் உள்ளார். மறுபுறம் லட்சுமியின் அப்பா பாரதி தான் என்று சொல்லிவிடுவோம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறார் கண்ணம்மா.
இந்நிலையில், கடந்த வாரம் கண்ணம்மா வீட்டுக்கு அரசு அதிகாரி ஒருவர் வந்து உங்க வீட்டில் யார் யார் இருக்க என்ற கேள்வியை கண்ணமாவிடம் கேட்கிறார். இதற்கு பதிலளித்த கண்ணம்மா, என் பெயர் கண்ணம்மா, என் பொண்ணு பெயர் லட்சுமி என்று தெரிவிக்க, உடனே அந்த அரசு அதிகாரி ஆதார் கார்டு இருக்கா மேடம் என்று கேட்கிறார் அந்த ஆதார் கார்டை பார்த்த அதிகாரி, என்னமா ஆதார் கார்டுல வேற அட்ரஸ் இருக்கு, சீக்கிரம் புதுப்பித்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதை கவனித்த லட்சுமிக்கு ,அம்மாவின் ஆதார் கார்டில் இருக்கும் பழைய வீட்டின் முகவரியைத் தேடி சென்று நம் அப்பா யார் என்று அறிந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறாள். லட்சுமி ஆதார் கார்டை எடுத்துக் கொள்கிறாள். அதில் உள்ள முகவரியைத் தேடி செல்கிறாள்.
இதற்கிடையில், பாரதியின் வீட்டுக்கு வந்த கண்ணம்மா, தனது மாமியாரிடம் லட்சுமி தன் அப்பா பற்றி தொடர்ந்து கேட்பதாவும், அவளுக்கு ஏதோ ஒன்று தெரிந்துவிட்டது. ரொம்ப வித்தியாசமா நடந்துக்குறா. லட்சுமி அப்பா இல்லாத பொண்ணாவே இந்த சமூகத்துல கடைசி வர வாழனுமா..? என்று கேள்வி கேட்கும் கண்ணம்மா, இறுதியில் நான் லட்சுமிகிட்ட உண்மைய சொல்லதான் போறேன் என்று அனைவரது முன்பும் தெரிவிக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து கத்தும் பாரதி, கண்ணம்மாவைத் திட்டுகிறார். அப்போது, பாரதியின் அம்மா சௌந்தர்யா, பாரதியை இன்னும் எவ்வளவு காலம் தான் உன் சந்தேகம் நீடிக்கும் என்று கேள்வி எழுப்புகிறார். அப்போது லட்சுமி பாரதி வீட்டுக் கதவை திறந்து கொண்டு உள்ளே வருவதோடு முடிவடைகிறது கடந்த வாரத்தின் எபிசோட்.
இந்நிலையில், இந்த வாரத்திற்கான புது ப்ரோமா வெளியாகி உள்ளது. அதில்,லட்சுமி ஆதார் கார்டில் உள்ள முகவரியை ஃபாலோ செய்து கொண்டே போகிறார். அப்போது, பாரதி வீட்டின் கதவை திறந்து லட்சுமி உள்ளே செல்கிறார். ’இங்கதான் என் அப்பா இருகிறாரா?’ என்று சொல்லி உள்ளே செல்லும் லட்சுமி, மாடிப் படி ஏறி உள்ளே செல்கிறார். அங்கு பாரதி, கண்ணம்மா, பாரதியின் அம்மா, அப்பா, தங்கை, அவர் கணவர் என எல்லோரும் பேசிக் கொண்டிருப்பதை லட்சுமி கேட்டு விடுகிறார்.
இந்தற்கிடையில், கண்ணம்மா, ’நீங்கதான் லட்சுமியின் அப்பா என்பதை அவளிடம் சொல்ல போகிறேன்.’ என்று சொல்கிறார்.
இதைக் கேட்டும் லட்சுமி, ‘அப்போ டாகடர் அங்கிள்தான் என் அப்பாவா?” என்று சொல்லிக்கொண்டு கண்ணீருடன் மனம் நெகிழ்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ புரிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்