Bharathi Kannamma Arun: நீங்களும் வெளியே வந்துட்டீங்களா? வைரலாகும் 'பாரதி கண்ணம்மா' ஹீரோ இன்ஸ்டா போஸ்ட்!
நீண்ட நாட்களுக்கு பின்பு பாரதி ரோலில் இருந்து வெளியே வந்து அருணாக நான் - பாரதி கண்ணம்மா ஹீரோ
தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டாப் சீரியல் பாரதி கண்ணம்மா. இதில் பாரதியாக நடிப்பவர் நடிகர் அருண் பிரசாத். இவருக்கு பெண் ரசிகைகள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது.
சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்க கூடிய கதாநாயகனாகவும் அருண் இப்போது இருக்கிறார். சீரியலில் அருணுக்கு இதுதான் முதல் பயணம். இதற்கு முன்பு மேயாத மான் படத்தில் இவர் வைபவ்வின் நண்பராக நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி நண்பர்களுடன் சேர்ந்து பல குறும்படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
இந்நிலையில் அருண் பிரசாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நீண்ட நாட்களுக்கு பின்பு பாரதி ரோலில் இருந்து வெளியே வந்து அருணாக நான்” என்று குறிப்பிட்டிருந்தார்.
View this post on Instagram
இதனையடுத்து அருண், பாரதி கண்ணம்மா சீரியலிலிருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் இருந்து சில நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு டூர் போயிருப்பதாகவே பாரதி கண்ணம்மா சீரியல் வட்டாரம் தெரிவிக்கிறது. அங்கு எடுத்த புகைப்படங்களையே அவர் பகிர்ந்துவருகிறார் எனவும் கூறப்படுகிறது. அவரது இந்த போஸ்ட்கள் தற்போது வைரலாகியுள்ளன.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்