Bharathi Kannamma: இனி அவருக்கு பதில் இவர்.... பாரதி கண்ணம்மாவின் புது ’அஞ்சலி’ இவர்தானா?
கண்மணி நடித்து வந்த அஞ்சலி கதாப்பாத்திரத்தில் ஜீ சேனலில் நடித்து வரும் அருள்ஜோதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் ப்ரைம் சீரியலான பாரதி கண்ணம்மாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். பாரதி கண்ணம்மா என்றாலே ரோஷினி தான். ஆனால் அவர் சீரியலில் இருந்து திடீரென விலகினார். இதனால் பாரதி கண்ணம்மா ரசிகர்கள் வருத்தமடைந்தனர். அவரை அடுத்து புதிய கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார்.
அதேபோல் ரோஷினையை தொடர்ந்து அகிலனும் சீரியலில் இருந்து வெளியேறி திரைப்படத்துக்கு போனார். தற்போது புது அகிலனாக நடித்து வருகிறார் சுகேஷ். இந்நிலையில் அகிலனின் மனைவியாக நடித்த கண்மணி மனோகரனும் சீரியலை விட்டு விலகினார். இது தொடர்பாக சோஷியல் மீடியாவில் அறிவிப்பை வெளியிட்ட கண்மணி, இன்னொரு ப்ரோஜக்ட் மூலம் உங்களை சந்திக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். சீரியலில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருவது பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
இந்நிலையில், கண்மணி நடித்து வந்த அஞ்சலி கதாப்பாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்பதற்கு தகவல் கிடைத்துள்ளது. ஜீ சேனலில் நடித்து வரும் அருள்ஜோதி, ‘அஞ்சலி’ கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
இதற்கிடையே சீரியலின் கதை அரைத்த மாவையே அரைக்கும் கதையாக இருப்பதாக ப்ரோமாக்களை இணையவாசிகள் தொடர்ந்து கிண்டலடித்து வருகின்றனர். இனிமேல் பாரதியும், கண்ணமாவும் சேர்வதுபோல் ஒரு டிவிஸ்ட் வைத்தாலும் இனி தமிழக ரசிகர்கள் நம்ப மாட்டார்கள், இதுவும் ஏமாற்று வேலையாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் நம்ப மாட்டார்கள் என கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
dharsha gupta : குக் வித் கோமாளி புகழ் தர்ஷாகுப்தா ஸ்பெஷல் ஆல்பம்...!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்