Lata Mangeshkar Last Rites: இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் இறுதிச்சடங்கு... முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம்
பிரதமர் மோடி, மகாரஷ்டிரா மாநிலம் உதவ் தாக்கரே, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், பாலிவுட் நடிகர் ஷாரூக்க்கான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.
மும்பையில் வசித்து வந்த பிரபல பாடகர் லதா மங்கேஷ்கர், உடல்நல பாதிப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 92. பாடகி லதாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மும்பை சிவாஜி பூங்காவில் அரசு மரியாதையுடன் அவரது உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.
#WATCH | State honour being given to veteran singer Lata Mangeshkar at Mumbai's Shivaji Park
— ANI (@ANI) February 6, 2022
(Source: DD news) pic.twitter.com/9fMvwyT9W6
பிரதமர் மோடி, மகாரஷ்டிரா மாநிலம் உதவ் தாக்கரே, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், பாலிவுட் நடிகர் ஷாரூக்க்கான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.
லதா மங்கேஷ்கர் மறைவு:
முன்னதாக, மும்பையில் வசித்து வந்த அவருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். பாடகி லதாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது ரசிகர்கள் அவருடன் இணைந்து பணியாற்றியவர்கள் உட்பட பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதில் மீரூட்டைச் சேர்ந்த கௌரவ் சர்மா கடந்த 35 ஆண்டு காலமாக லதாவுக்காக ஒரு அருங்காட்சியகத்தை நடத்தி வருபவர். லதா மங்கேஷ்கரின் இறப்பை அடுத்து ஒட்டுமொத்த உலகமும் அழுவதாகவும் இந்தியா இன்று கேட்கும் திறனை இழந்ததாகவும் லதா மங்கேஷ்கர் ஒரு சகாப்தத்தை விட்டுச் சென்றுள்ளார் என்றும் அவர் தனது இரங்கலில் கூறியுள்ளார்.
லதா மங்கேஷ்கர் பற்றி எது வெளியிடப்பட்டாலும் அது கௌரவிடம் இருக்கும். கடந்த 35 வருடங்களாக லதா மங்கேஷ்கர் பாடியது, எழுதியது, அவர் பற்றி வெளியான புத்தகங்கள் என எது வெளியானாலும் அதனை தனது அருங்காட்சியகத்தில் சேர்க்கத் தொடங்கினார் கௌரவ். முதலில் அவரைக் கேலி செய்யத் தொடங்கியவர்கள் பிறகு அவரைப் புரிந்துகொள்ளத் தொடங்கியதாகச் சொல்கிறார் கௌரவின் அம்மா.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்