மேலும் அறிய

Maamannan: உண்மையான ‘மாமன்னன்’ இவர்தானா? - மாரி செல்வராஜ் கையில் எடுத்தது முன்னாள் சபாநாயகர் தனபால் கதையா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள மாமன்னன் படத்தில் இடம் பெற்றுள்ள வடிவேலுவின் கேரக்டர் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள மாமன்னன் படத்தில் இடம் பெற்றுள்ள வடிவேலுவின் கேரக்டர் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால்  என பலரும் நடித்துள்ள மாமன்னன் படம் நேற்று தியேட்டரில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. இந்த படம் உதயநிதியின் கடைசிப்படம் என்பதால் ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும் பெரிய எதிர்ப்பார்ப்புடன் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர். 

மாமன்னன் படம் பட்டியலின மக்களின் அடையாளத்தையும், அரசியலையும், ஆதிக்க வர்க்கம் எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. படம் பார்த்த பலரும் தங்களை பாதித்த வசனங்கள், காட்சிகள் குறித்த பல தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த படம் நடிகர் வடிவேலுவின் ஆளுமைக்கு மற்றுமொரு சான்று என பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

இப்படியான நிலையில் மாமன்னன் படம் பார்த்த பலரும் வடிவேலுவின் கேரக்டர் முந்தைய அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த தனபாலை நியாபகப்படுத்துவதாக குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

அதற்கு முதல் காரணம் கொங்கு மண்டலத்தில் இந்த கதையானது அமைக்கப்பட்டுள்ளது. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த தனபால் அதிமுக சார்பில் 1977 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை காலக்கட்டத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் 7 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல், சேலம், திருப்பூர் சங்ககிரி, ராசிபுரம் , அவிநாசி  தொகுதியில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

2012 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் சபாநாயகராக நியமிக்கப்பட்டவர். மாமன்னன் படத்திலும் எம்.எல்.ஏ.வாக இருக்கும் வடிவேலு, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று சபாநாயகராக பதவியேற்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. சேலம் மாவட்ட அரசியல் பற்றி பேசுவதால் மாமன்னன் படம் பேசுவதால் இந்த படம் தனபாலின் கதை தான் என பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க: மாமன்னன்.. இவன் மக்களின் மன்னன்...சம்பவம் செய்த மாரி செல்வராஜ்.. முழு விமர்சனம் இதோ...!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget