Nelson on Beast: ஹைஜாக் கதை ஒன்னும் சினிமாவுக்கு புதுசு இல்ல.. ஆனா.. நெல்சன் சொன்ன பீஸ்ட் அப்டேட்..
இதுபோல பல படங்கள் வந்திருந்தாலும் சொல்லப்படும் விதத்திலும், காட்சிகள் உருவாக்கத்திலும் அவை வேறுபடும் - இயக்குநர் நெல்சன்
கூர்கா படத்துக்கும், பீஸ்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இயக்குநர் நெல்சன் கூறியுள்ளார். பீஸ்ட் டிரெய்லர் வெளியானபோது, கூர்கா படக் கதைபோல் இருப்பதாக பலர் கூறிய நிலையில், நெல்சம் தற்போது அதற்கு விளக்கமளித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் (Beast) படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி அனிருத் இசையமைத்துள்ள அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்து இருக்கிறது.
அதனைத்தொடர்ந்து வெளியான போஸ்டரும் வைரலான நிலையில், விஜய் குரலில் ‘ஜாலிலோ ஜிம்கானா’ பாடலும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் அண்மையில் படத்திலிருந்து டிரெய்லரும் வெளியிடப்பட்டது. டிரெய்லர் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், அதில் இடம்பெற்ற காட்சிகளை வைத்து படம் ஹைஜாக் பற்றிய கதை என்று தெரியவந்தது. ஹைஜாக் தொடர்பாக பல கதைகள் வந்திருப்பதால், இது அந்தப் படத்தின் கதை, இந்தப் படத்தின் கதை என்று கூறினர். தமிழில் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘கூர்கா’ படத்தின் ஹைஜாக் தொடர்புடையது. அதைவைத்து, பீஸ்ட் படம் கூர்கா படத்தின் காப்பி என்று நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கிண்டல் செய்தனர்.
இந்த நிலையில், இதுதொடர்பாக பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் பேட்டியளித்துள்ளார். அதில், பொதுமக்கள் அதிகம் நடமாடும் ஒரு ஷாப்பிங் மாலை ஹைஜாக் செய்யும் கதை ஒன்றும் சினிமாவுக்கு புதிதில்லை என்றும், இதுபோல பல படங்கள் வந்திருந்தாலும் சொல்லப்படும் விதத்திலும், காட்சிகள் உருவாக்கத்திலும் அவை வேறுபடும் என்றும், இந்த மாதிரியான கதைகளில் சில காட்சிகள் ஒரே மாதிரி வருவதும் தவிர்க்க முடியாது எனவும் கூறினார்.
மேலும், தானும் கூர்கா படத்தை பார்த்ததாகவும், அதற்கும் பீஸ்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் கூறிய நெல்சன், மணி ஹெய்ஸ்ட் தொடருக்கும், இதற்கும் சம்பந்தமும் இல்லை எனவும் விளக்கமளித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்