Actor Babloo : ”ஆமா 57.. அவங்களுக்கு 23.. கண்டிப்பா இப்படி செய்யமாட்டேன்..” : உண்மையை உடைத்த நடிகர் பப்லு
57 வயதான நடிகர் பப்லு என்ற ப்ரித்விராஜ், 23 வயதான ஒரு பெண்ணை இரண்டாவது முறையாக திருமணம் செய்துள்ளார். இதுதான் தமிழ்,தெலுங்கு இண்டஸ்ட்ரியின் ஹாட் டாப்பிக்.
57 வயதான நடிகர் பப்லு என்ற ப்ரித்விராஜ், 23 வயதான ஒரு பெண்ணை இரண்டாவது முறையாக திருமணம் செய்துள்ளார். இதுதான் தமிழ்,தெலுங்கு இண்டஸ்ட்ரியின் ஹாட் டாப்பிக். இந்நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆமாம் நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். என் மனைவியைப் பிரிந்துவிட்டேன். விவாகரத்து நடந்து 2 மாதங்களாகிறது. ஆனால் நான் இப்போது தொடர்பில் இருக்கும் பெண்ணுடன் திருமணமாகவில்லை என்பது மட்டும் உண்மை என்றார்.
நடிகர் பப்லு ப்ரித்விராஜ், குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் கால் தடம் பதித்தார். மர்மதேசம், வாணி ராணி, ரமணி Vs ரமணி மற்றும் அரசி ஆகிய பிரபல நாடகங்களில் நடித்துள்ளார். இவர் பீனா என்பவருடன் 30 வருடங்கள் வாழ்ந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இருவரும் பிரிந்த பின், மலேசியாவை சார்ந்த 23 வயது பெண்ணை மணந்துள்ளார் என தகவல் பரவின. சமீபமாக, திருமணம் குறித்த கேள்வியை, அவரிடம் கேட்ட போது “ அப்படி ஒன்றும் கல்யாணம் நடிக்கவில்லை. நான் ஒரு பெண்ணை திருட்டுத்தனமாக திருமணம் செய்துகொள்ள மாட்டேன். அப்படி செய்தாலும் எல்லோருக்கும் சொல்லிவிட்டுதான் செய்வேன்” என்று பதிலளித்திருந்தார் பப்லு.
போட்டுடைத்த பப்லு..
இந்நிலையில் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்தப் பேட்டியில், ஆமாம் நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். என் மனைவியைப் பிரிந்துவிட்டேன். விவாகரத்து நடந்து 2 மாதங்களாகிறது. ஆனால் நான் இப்போது தொடர்பில் இருக்கும் பெண்ணுடன் திருமணமாகவில்லை என்பது மட்டும் உண்மை என்று போட்டுடைத்துள்ளார். இது குறித்து மேலும் அவர் பேசும்போது சிலர் இண்டஸ்ட்ரியில் பப்ளிசிட்டிக்காக கிசுகிசுக்கள், வதந்திகளைப் பரப்புவது உண்டு. அது சில நேரங்களில் உண்மைதான். என்னைப் பற்றிய செய்தி வந்தபோது கூட எனக்கு இரண்டு, மூன்று பட ஆஃபர் வந்தது. அப்போதுதான் வதந்திகளை சிலர் தாமே கிளப்பிவிடுவதன் பின்னணியில் உள்ள அரசியலை உணர்ந்தேன். ஆனால் நான் அந்த மாதிரி சீப் பப்ளிசிட்டி தேடுபவன் இல்லை. எனக்கு பட வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. சன் டிவியில் கண்ணான கண்ணே என்ற சீரியலும் செய்கிறேன். எனக்கு பப்ளிசிட்டி தேடி பட வாய்ப்பு பெறும் அவசியம் ஏதுமில்லை.
அப்புறம் இன்னொரு விஷயம். நான் மறுமணம் செய்வது பற்றி பேசுபவர்கள் எல்லாம் ஏதோ நான் கொலைக்குற்றம் செய்வது போல் பேசுகிறார்கள். நானும் என் மகனின் தாயும் பிரிய 6 ஆண்டுகள் முன்னரே முடிவெடுத்தோம். அதன்பின்னர் நாட்களை அப்படியே கடத்தினோம். ஆனால் ஒருகட்டத்தில் நாம் பிரிவது தான் சரி என்று என் மனைவி சொன்னார். அதனாலேயே நாங்கள் இருவரும் பேசி ஒருமித்து முடிவெடுத்து முறைப்படி விவாகரத்தும் பெற்றுள்ளோம். எங்களுக்கு விவாகரத்தாகி 2 மாதங்கள் ஆகின்றன.வயது என்பது வெறும் எண் தான். என் மனது இன்னும் இளமையாகவே இருக்கிறது. அவருக்கு 23 வயதென்றால் உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை என்று எனக்குப் புரியவில்லை. அந்தப் பெண்ணிடமே நான் கேட்டேன். என்னை ஏன் லவ் பண்ண என்று. அதற்கு அந்தப் பெண் உங்கள் வயது எனக்குத் தெரியவில்லை நீங்கள் மட்டுமே தெரிகிறீர்கள் என்றார். நான் பெங்களூரு ஷூட்டிங் சென்றபோது தான் அவரை முதன்முறையாகப் பார்த்தேன். அப்போதுதான் என்னுடன் செல்ஃபி எடுத்தார் அறிமுகமானோம். என் ஃபேன் என்றார். எண்கள் மாற்றிக் கொண்டோம். நல்ல ப்ரெண்ட்ஸாக இருந்தோம். இப்போது அது காதலாக மாறியுள்ளது.” என்றார்
இந்தப் பிரிவை என் மகன் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளார். அவர் ஒரு சிறப்புக் குழந்தையாக இருப்பதால் அவருக்கு புரியாது என்றில்லை. அவர் நடக்கும் விஷயங்களைப் புரிந்து கொண்டுள்ளார். நாங்கள் மாதம் ஒருமுறை ஒரு ரிசார்ட்டில் தங்கி பொழுதைக் கழிக்கிறோம். அவர் என்னை ஆரம்பத்தில் பிரிந்து ரொம்ப அப்செட் ஆனார். அப்புறம் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டுள்ளார். என்னுடன் இருக்கும் நேரத்தை அப்படி சந்தோஷமாக செலவழிக்கிறார்.