Baakiyalakshmi Serial Promo: பாக்கியலட்சுமியை பார்க்க அழைக்கும் ராதிகா... பதறிய கோபி.. அடுத்தடுத்து ட்விஸ்ட்..!
கணவர் என்ன சொன்னாலும் தட்டாமல் கேட்கும் மனைவி பாக்யலட்சுமி, இதனால் மிகுந்த அவமானங்களைச் சந்திக்கிறார்.
![Baakiyalakshmi Serial Promo: பாக்கியலட்சுமியை பார்க்க அழைக்கும் ராதிகா... பதறிய கோபி.. அடுத்தடுத்து ட்விஸ்ட்..! Baakiyalakshmi Serial Promo radhika force to gopi seeing about baakiya Baakiyalakshmi Serial Promo: பாக்கியலட்சுமியை பார்க்க அழைக்கும் ராதிகா... பதறிய கோபி.. அடுத்தடுத்து ட்விஸ்ட்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/11/19aa3d8cb44661b76f80254fcbb099db_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 போன்ற சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விதமாக பாக்யலெட்சுமி சீரியல் கதைக்களம் நகர்ந்துவருகிறது. அப்பாவியான குணத்தைக்கொண்ட பாக்யாவாக நடிகை சுதித்ராவும், ஏமாற்றும் கணவர் ரோலில் நடிகர் சுதிசும் நடித்து வருகின்றனர். கணவர் என்ன சொன்னாலும் தட்டாமல் கேட்கும் மனைவி பாக்யலட்சுமி, இதனால் மிகுந்த அவமானங்களைச் சந்திக்கிறார். இந்நிலையில் தான் வாழ்க்கையில் எப்படியாவது தனது சொந்த உழைப்பில் முன்னேற வேண்டும் என்ற முனைப்போடு கேட்ரிங் தொழில் மேற்கொண்டு வருகிறார்.
இன்றைய ப்ரோமோ :
தன்னை எப்பொழுதும் இழிவாக பார்க்கும் தனது கணவர் முன்பும், வீட்டில் தனக்கென ஒரு இடத்தை அமைத்துக்கொள்ள நினைக்கும் பாக்யா சுயமாக சமைத்து வீடுகளில் விற்பனை செய்து வருகிறார். இந்த கட்டத்தில் பகல் வேளை முழுவதும் ராதிகா வீட்டில் இருக்கும் கோபிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ராதிகா ஒரு திட்டம் தீட்டுகிறார். அதில், " கோபி உங்களுக்கு இன்னைக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. எங்கையும் போகாதீங்க என்று ராதிகா தெரிவிக்க, என்ன ராதிகா சொல்ற எனக்கு சர்ப்ரைஸா.. என்ன சர்ப்ரைஸ் என்று கோபி அதிர்ச்சியாக கேட்கிறார்.
அதுவா என் ப்ரண்ட் டீச்சர் நமக்கு சமைச்சு எடுத்து வரபோறாங்க. அவங்கள தான் நம்ம மீட் பண்ண போறோம். எப்பவும் போல எதாச்சும் காரணம் சொல்லி ஓடிராதீங்க என்று ராதிகா கோபியிடம் கூற, மீட் பண்ண போறோமா என்று கேட்க, ராதிகாவும் ஆமாம் மீட் பண்ணதான் போறோம்" என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்.
தொடர்ந்து, ராதிகா "அவங்க நமக்காக சாப்பாடு எடுத்துட்டு வருவாங்க, இன்னைக்கு நீங்க டீச்சர மீட் பண்ண தான் போறீங்க. நானும் எனக்கு டீச்சர்ன்னு ஒரு ப்ரண்ட் இருக்காங்கன்னு சொல்லிட்டுதான் இருக்கேன்.. அது யாருன்னு பார்க்க வேணாமா..? என்று ராதிகா கோபியிடம் கூற, கோபி என்ன சொல்வது என்று தெரியாமல் திருட்டு முழி, முழிக்கிறார்.
டீச்சர்ன்னு சொன்னா உங்களுக்கு டென்சன் ஆகுதுல.. அது இன்னைக்கு என்னன்னு எனக்கு தெரிஞ்சு ஆகணும் என்று கூறி வீட்டுக்குள் சென்று ராதிகா அவரது பேக் எடுக்க செல்ல, கோபி தன் மனதிற்குள் " ஆகா.. இன்னைக்குதான் இந்த கதையோட க்ளைமாக்ஸா என்று நினைக்கிறார். அதோடு இந்த ப்ரோமோவும் முடிகிறது.
கடந்த சில மாதங்களாகவே கோபி ராதிகாவிடம் மாட்டிக்கொள்வது போலவும், கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தப்பித்து கொள்வது போலவும் கதை உருவாக்கப்பட்டு வருகிறது. அட போங்கடா இந்த முறையும் அததான பண்ண போறீங்க... எத்தனை நாளு தான் எங்கள இப்படி ஏமாத்த போறீங்க என்று பாக்கியலட்சுமி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)