(Source: ECI/ABP News/ABP Majha)
Nehah Menon : எனக்கும் பத்திரனாவுக்கும் காதலா? பாக்கியலட்சுமி இனியா கொடுத்த விளக்கம் என்ன?
Nehah menon : பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவாக நடித்து வரும் நேஹா மேனன், ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர் பத்திரனா இடையே காதல் என பரவி வரும் வதந்திக்கு கொடுத்த விளக்கம்.
பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவாக நடித்து வரும் நேஹா மேனன், ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர் பத்திரனா இடையே காதல் என பரவி வரும் வதந்திக்கு கொடுத்த விளக்கம்.
விஜய் டிவி சீரியல்கள் என்றுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெரும். அந்த வகையில் ப்ரைம் டைமில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் 'பாக்கியலட்சுமி'. கணவரின் அரவணைப்பு இல்லாத குடும்ப தலைவியாக இருந்து எப்படி படிப்படியாக முன்னேறி வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டத்தை அடைகிறார் என்பதை சுற்றிலும் நகரும் இந்த கதைக்களம் ஃபேமிலி ஆடியன்ஸையும் பெரிதும் கவர்ந்துள்ளது.
இந்த சீரியலில் பாக்கியலட்சுமியின் மகளாக இனியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நேஹா மேனன். இவர் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக ராதிகா சரத்குமார் நடித்த 'சித்தி 2' சீரியலில் பள்ளி செல்லும் மாணவியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கயல், பிள்ளை நிலா, நிறம் மாறாத பூக்கள், பைரவி உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். அதை தொடர்ந்து தற்போது காலேஜ் செல்லும் பெண்ணாக பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருகிறார் நேஹா மேனன். இந்த சீரியல் அவருக்கு மிக நல்ல பப்ளிசிட்டியை பெற்று கொடுத்துள்ளது. தற்போது நேஹா மேனன் குறித்த செய்தி ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
கேரளாவை சேர்ந்த நேஹா மேனன், CSK கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் இலங்கை வீரரான பத்திரனாவை காதலிக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது. இது குறித்து நேஹாவிடம் கேட்ட போது அவர் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "முதலில் எனக்கு கிரிக்கெட் விளையாட்டை பார்க்கவே தெரியாது. யாராவது கமெண்ட்ரி சொன்னா பார்ப்பேன் அவ்வளவு தான்.
அப்படித்தான் பக்கத்தில் இருந்தவர் ஒருவர் பத்திரனா பத்தி சொன்னார். CSK டீம் போன தடவை IPL மேட்ச் ஜெயிச்சதுக்கு அவர் ஸ்டேட்டஸ் போட்டு இருந்தார். நான் அதை ஷேர் செய்தேன். அதை வைச்சு எனக்கும் பத்திரனாவுக்கும் காதல் என சொல்லி கிசு கிசு எல்லாம் வைரலானது. நானும் அதை பார்த்தேன் இருந்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சிரித்துவிட்டு அப்படியே விட்டுட்டேன். உண்மையை சொல்லனும்னா நான் பத்திரனாவை நேரில் கூட பார்த்தது கிடையாது என அவர் பதில் அளித்து இருந்தார்.
மேலும் நிஜ வாழ்க்கையில் காதல் தோல்வி ஏற்பட்டு அதற்காக பயங்கரமாக அழுததாகவும் கூறி இருந்தார். ஆனால் அதற்கான காரணத்தை சொன்னால் அவருடைய அம்மா உதைப்பார் என்பதையும் கூறி இருந்தார்.
இப்படி ஒண்ணுமே இல்லாத விஷயத்தை இருப்பது போல வதந்திகளை பரப்புவது சர்வ சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. தற்போது நடிப்பில் பிஸியாக இருந்து வரும் நேஹா மேனன் சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் 'லட்சுமி' தொடரின் நாயகியாக நடிக்கும் ஸ்ருதியின் தங்கையாக நடிக்கிறார்.