Ayalaan Box Office: 4 நாள்களில் இத்தனை கோடிகளா.. அயலான் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Ayalaan Box office Collection: அயலான் திரைப்படத்தின் வசூல் தொகை குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் இந்த ஆண்டு பொங்கல் ரிலீசாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் அயலான். நிதிப் பிரச்னை, தொழில்நுட்பப் பிரச்னை, கொரோனா ஊரடங்கு என பல்வேறு காரணங்களார் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, ஈஷா கோபிகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் மூலம் தமிழில் முதன்முறையாக ஏலியனுடன் ஸ்க்ரீன் ஷேர் செய்த டாப் நடிகர் எனும் பெருமையை சிவகார்த்திகேயன் இப்படத்தின் மூலம் பெற்றுள்ளார். குறிப்பாக படத்தின் சிஜி காட்சிகளும் ஏலியன் வடிவமைப்பும் பாராட்டுகளை அள்ளி வரும் நிலையில், படத்தின் இரண்டாம் பாதி, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஆகியவை நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகின்றன.
இந்நிலையில் அயலான் (Ayalaan) திரைப்படம் முதல் நான்கு நாள்களில் உலகம் முழுவதும் ரூ.50 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு பகிர்ந்துள்ளது.
Breaking through Earthly limits 👽
— KJR Studios (@kjr_studios) January 16, 2024
It’s an invasion across the universe as #Ayalaan soars in success, grossing 50+ crores worldwide 🛸#AyalaanPongal @Siva_Kartikeyan @TheAyalaan ‘Chithha’ #Siddharth @arrahman @Ravikumar_Dir @Phantomfxstudio @bejoyraj @Gangaentertains… pic.twitter.com/iM7ViS77jg
இந்த பொங்கலுக்கு குழந்தைகளைக் குறிவைத்து ஏலியனுடன் சிவகார்த்திகேயன் களமிறங்கியுள்ள நிலையில், எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி விமர்சனங்கள் கடந்தும் படம் வசூலைக் குவித்து வருகிறது.
Sacnilk தளத்தின்படி, இந்தியா முழுவதும் முதல் நாள் 3.2 கோடிகளையும், இரண்டாம் நாள் 4.35 கோடிகளையும், மூன்றாம் நாள் 5.15 கோடிகளையும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நான்காம் நாளான நேற்று உச்சபட்சமாக 6.75 கோடிகளை வசூலித்துள்ளது. இதுவரை மொத்தம் 23.8 கோடிகளை அயலான் திரைப்படம் இந்தியாவில் வசூலித்துள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது படக்குழு உலகளாவிய வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மற்றொருபுறம் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் வசூல் குறித்து எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு தகவல் இதுவரை வெளியாகவில்லை.
ஆனால் பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் sacnilk தளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கேப்டன் மில்லர் திரைப்படம் இந்தியாவில் முதல் நாளில் 8.7 கோடிகளையும், இரண்டாம் நாள் 7.45 கோடிகளையும், மூன்றாம் நாள் 7.8 கோடிகளையும் வசூலித்துள்ளது. முதல் மூன்று நாள் வசூல் சராசரியில் மாற்றம் பெரிதாக இல்லாத நிலையில், நான்காவது நாளான நேற்று இப்படத்தின் வசூல் மெல்ல சரிந்து 6.79 கோடிகளைக் குவித்து, இதுவரை மொத்தமாக 30.57 கோடிகளை வசூலித்துள்ளது.
மேலும் படிக்க: Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!
Captain Miller Review: "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!