Arun Vijay | கிராமம்.. ஆக்ஷன்.. அதகளம்.. அருண் விஜய் கொடுத்த அதிரடி அப்டேட்..
விறுவிறு கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் யானை படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். வில்லனாக பிரகாஷ் ராஜ் ஒப்பந்தமாகியுள்ளார்.
![Arun Vijay | கிராமம்.. ஆக்ஷன்.. அதகளம்.. அருண் விஜய் கொடுத்த அதிரடி அப்டேட்.. arun vijay yaanai movie getting into final wrap Arun Vijay | கிராமம்.. ஆக்ஷன்.. அதகளம்.. அருண் விஜய் கொடுத்த அதிரடி அப்டேட்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/01/12a197ec073d92fd0795144a4d0e61f8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அருண் விஜய் தற்போது தனது மாமா இயக்குநர் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்து வருகிறார்.என்னதான் அருண் விஜயின் மாமாவே இயக்குநராக இருந்தாலும், இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுதான் என்பதாலேயே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கிராமத்து கதை பின்ணணியில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. முன்னதாக காரைக்குடி , ராமேஷ்வரம் ,நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று படப்பிடிப்பை நடத்தியிருந்தனர் படக்குழு. தற்போது இறுதிக்கட்ட படப்பில் உள்ள யானை படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் காரைக்குடி பகுதிகளில் செட் அமைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்த அப்டேட்டை நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
From the sets of #Yaanai!!❤📽#DirectorHARI #Karaikudi #LastLegOfShoot@DrumsticksProd @gvprakash @priya_Bshankar @realradikaa @thondankani @iYogiBabu @editoranthony pic.twitter.com/26fuqrMKzm
— ArunVijay (@arunvijayno1) November 1, 2021
Off for the final leg of shoot for #Yaanai!! 🎬📽 #Karaikudi #FinalSchedule #DirectorHari @priya_Bshankar @realradikaa @gvprakash @iYogiBabu @thondankani @gopinathdop @editoranthony @DrumsticksProd pic.twitter.com/SCHu1rYO4c
— ArunVijay (@arunvijayno1) October 28, 2021
விறுவிறு கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் யானை படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். வில்லனாக பிரகாஷ் ராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர யோகி பாபு , ’குக் வித் கோமாளி ‘ புகழ் , ராதிகா சரத்குமார், சமுத்திரகனி,சஞ்சீவ், கருடா ராம் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர். மேலும் 8 வருடங்களுக்கு பிறகு கங்கை அமரன் இந்த படத்தில் கௌரவ தோற்றதில் எண்ட்ரி ஆக உள்ளார்.
கொரோனா முதல் அலையில் வழங்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கின. ஆனால் இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தடைபட்டது. இந்நிலையில் படப்பிடிப்பு நடத்திக்கொள்ள மீண்டும் அரசு அனுமதி அளித்ததால் கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.அவ்வப்போது ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்களையும் படத்தின் அடுத்தடுத்த நகர்வுகளையும் அருண் விஜய் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. யானை படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவுள்ளார் அருண் விஜய்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)