Arun Vijay | அசத்தலாக வெளியான அருண் விஜய் பட ட்ரெய்லர்.. ஷேர் செய்த கோலிவுட் பிரபலங்கள்..!
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பார்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம், மாஃபியா. கரோனா ஊரடங்கு காலத்தில் வெளியான இப்படம கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து அவர் அடுத்த படம் 'பார்டர்'. ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்க இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ளார். படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்று ஊரடங்கு உத்தரவிற்குப் பிறகு சில தளர்வுகளுடன், 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் தற்போது திறக்கப்பட்டிருக்கிறது. அதுசமயம் பல புதிய திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. வெகுநாட்கள் கழித்து ரசிகர்களும், பார்வையாளர்களும் திரையரங்கத்தை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் எதிர்வரும் மாதங்களில் பல புதிய திரைப்படங்கள் வெளியாக தயாராகி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து விரைவில் வெளியாக உள்ள திரைப்படங்களின் பட்டியலில் அருண் விஜய்யின் ‘பார்டர்’திரைப்படமும் இணைகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் கதையையும், கதாபாத்திரத்தையும் தேர்வு செய்து நடித்து வரும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். 'அருண்விஜய்யின் பார்டர்' படத்திலும் துணிச்சல் மற்றும் சவாலான புலனாய்வு துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
அறிமுக நடிகை ஸ்டெபி பட்டேல், நாயகன் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவருடன் ரெஜினா கசாண்ட்ரா புலனாய்வு துறை அதிகாரியாக நடித்து இருக்கிறார். இயக்குநர் அறிவழகன் மற்றும் அவரது குழுவினர், கொரோனா பாதிப்பு காலகட்டத்திலும் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, படத்தின் இறுதிகட்ட பணிகளை நிறைவு செய்தனர்.
பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகியிருக்கும் ’அருண்விஜய்யின் பார்டர்' படத்தின் மூலம் இயக்குநர் அறிவழகன் மீண்டும் ஒரு திறமையான இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார். இந்த திரைப்படம் தணிக்கைக்குச் செல்லும் வகையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்திருக்கிறது.
இந்நிலையில் பார்டர் படத்தின் ட்ரெய்லரை நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். அதில் அருண் விஜய் பாதுகாப்பு புலனாய்வு அதிகாரியாக நடித்து இருக்கிறார். கிரைம் பாணியில் உருவாகியுள்ள இந்த படம். விறுவிறுப்பாக வெளியாகி இருக்கும் இந்த படத்தின் ட்ரெய்லரை அருண் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும்.