"ஸ்லீவ்லெஸ் கூட போட மாட்டாங்களாம்...சாய் பல்லவியை புகழ்ந்த அர்ஜூன் ரெட்டி இயக்குநர்
அர்ஜூன் ரெட்டி படத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்ததாக அப்படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளார்

சாய் பல்லவி
அமரன் திரைப்படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பின் சாய் பல்லவி நடித்து தெலுங்கில் வெளியாக இருக்கும் படம் தண்டேல். சந்து மொண்டெட்டி இயக்கத்தில் நாகசைதன்யா சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள ரொமாண்டிக் த்ரில்லர் படம் தண்டேல். வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் ஆந்திரா தெலங்கானா மாநிலத்தில் நடந்து வருகின்றன. இதில் கலந்துகொண்ட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா சாய் பல்லவி குறித்து பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
சாய் பல்லவி பற்றி சந்தீப் ரெட்டி வங்கா
2017 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. ஆணாதிக்க கருத்துகளை உயர்த்திபிடிப்பதாக இப்படம் சமூக ஆர்வலர்களிடையே கரும் எதிர்ப்புகளை சந்தித்தது. தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியில் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்திலும் பயங்கர சர்ச்சைக்குரிய இயக்குநராக பேசப்பட்டார். ஒரு பக்கம் பாக்ஸ் ஆபிஸில் 900 கோடி வசூலித்த அனிமல் படத்தை தமிழ் முதல் இந்தி வரை பல பிரபலங்கள் விமர்சித்து பேசினார்கள்
தண்டேல் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சந்தீப் ரெட்டி வங்கா அர்ஜூன் ரெட்டி படத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க ஆசைப்பட்டதாக தெரிவித்தார். சாய் பல்லவியின் மேனேஜர் என்று வேறு ஒரு நபர் தன்னிடம் பேசியதாகவும் சாய் பல்லவி ஸ்லீவ்லெஸ் கூட அணியமாட்டார் அவர் இந்த படத்தில் நடிக்கவே மாட்டார் என்று அந்த நபர் சொன்னதாகவும் அவர் தெரிவித்தார் " நடிகைகளுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வரும்போது அவர் மாறுவார்கள் ஆனால் தனது கரியரின் தொடக்கத்தில் எப்படி இருந்தாரோ அதே மாதிரி இன்றும் இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் அவர் மாறவே இல்லை." என சாய் பல்லவியை பாராட்டியுள்ளார் சந்தீப் ரெட்டி வங்கா .
"I wanted to cast #SaiPallavi in #ArjunReddy, but after hearing my story, the coordinator said she wouldn’t even wear sleeveless, so she definitely wouldn’t act in my film."
— Telugu Chitraalu (@TeluguChitraalu) February 2, 2025
– Director @imvangasandeep at the #Thandel pre-release event. pic.twitter.com/tKH8ByO9up
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

