மேலும் அறிய

சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்.. கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக களமிறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பரப்புரையில் களமிறங்க உள்ளார்.

உலகின் அனைத்து நாடுகளாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் தேர்தலாக மாறியிருப்பது அமெரிக்க அதிபர் தேர்தல். உலகின் வல்லரசு நாடாக உலா வரும் அமெரிக்காவின் ஒவ்வொரு செயல்பாடுகளும் உலக பொருளாதாரத்தையே மாற்றும் வல்லமை கொண்டதால் அந்த நாட்டு அதிபராக யார் தேர்வு செய்யப்பட போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல்:

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசும், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். இதற்காக இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் இருவரின் வெற்றியைத் தீர்மானிப்பதிலும் இந்தியர்களின் வாக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியர்களை கவரும் விதத்திலும் இருவரும் வாக்கு சேகரித்து வருகின்றனர். முதல் கருப்பின பெண், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது கமலா ஹாரிசுக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

கமலா ஹாரிசுக்காக களமிறங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்:

இந்த சூழலில், கமலா ஹாரிசுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அவருக்கு ஆதரவாக இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், ஆஸ்கர் விருது வென்றவருமான ஏ.ஆர்.ரஹ்மான் பரப்புரையில் களமிறங்க உள்ளார். அவர் தன்னுடைய இசை மூலமாக கமலா ஹாரிசுக்கு ஆதரவாக பரப்பரையில் ஈடுபட உள்ளார்.

நாளை இரவு 8 மணிக்கு இணையவழி மூலமாக நடத்தப்படும் 30 நிமிட இசை நிகழ்ச்சி மூலமாக இந்த கமலா ஹாரிசுக்கு ஆதரவாக பரப்புரையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஈடுபட உள்ளார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள ஏஏபிஐ விக்டரி பண்ட் தலைவர் சேகர் நரசிம்மன் கூறியிருப்பதாவது, இதன் மூலமாக அமெரிக்காவில் முன்னேற்றம் மற்றும் பிரதிநிதித்துவத்திற்காக நிற்கும் தலைவர்கள் மற்றும் கலைஞர்களின் குழுவின் ஏ.ஆர்.ரஹ்மான் தனது குரலை சேர்த்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதற்கான சிறப்பு வீடியோ ஒன்றையும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

சரிசம பலம்:

உலகம் முழுவதும் பிரபலமான இசையமைப்பாளரும் ஆசிய மக்கள் மத்தியில் மிகப்பெரிய புகழ்பெற்றவருமான ஏ.ஆர்.ரஹ்மான் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக களமிறங்கியிருப்பது ஜனநாயக கட்சியினருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்துள்ள டொனால்ட் ட்ரம்ப் இந்த முறையும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு அவருக்கான ஆதரவை மேலும் அதிகரித்துள்ளது.

கமலா ஹாரிசுக்கும், ட்ரம்பிற்கும் சரிசம ஆதரவு இருப்பதால் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்? என்ற கேள்வி உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.  கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அமெரிக்காவின் அதிபரான முதல் பெண் என்ற பெருமையையும், அமெரிக்காவின் அதிபரான முதல் கருப்பின பெண் என்ற பெருமையும் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jananayagan Release: ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? சென்சார் சர்ச்சை குறித்து மனம் திறந்த தயாரிப்பாளர்!
Jananayagan Release: ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? சென்சார் சர்ச்சை குறித்து மனம் திறந்த தயாரிப்பாளர்!
RJ Balaji: தியேட்டரில் சாமியாட ஆள் கூட்டிட்டு வர்றோமா? - டென்ஷனான ஆர்.ஜே.பாலாஜி!
RJ Balaji: தியேட்டரில் சாமியாட ஆள் கூட்டிட்டு வர்றோமா? - டென்ஷனான ஆர்.ஜே.பாலாஜி!
Warrant Series Review : ஓடிடியில் வெளியாகியுள்ள வாரண்ட் வெப் சீரிஸ் எபிசோட் 1 விமர்சனம்
Warrant Series Review : ஓடிடியில் வெளியாகியுள்ள வாரண்ட் வெப் சீரிஸ் எபிசோட் 1 விமர்சனம்
தெளிவாக சிந்திக்கும் இயக்குநர்களில் பாண்டிராஜ் ஒருவர்..இயக்குநர் மிஷ்கின் பேச்சு
தெளிவாக சிந்திக்கும் இயக்குநர்களில் பாண்டிராஜ் ஒருவர்..இயக்குநர் மிஷ்கின் பேச்சு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
IPL 2026: எலிமினேட்டருக்கு செல்லுமா ராஜஸ்தான்? முட்டுக்கட்டை போடுமா மும்பை?
IPL 2026: எலிமினேட்டருக்கு செல்லுமா ராஜஸ்தான்? முட்டுக்கட்டை போடுமா மும்பை?
Minister Keerthana : வாய்கிழியே பேசிட்டு இப்போ இப்படி சிரிக்கிறீங்களே.! அமைச்சர் கீர்த்தனாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்
வாய்கிழியே பேசிட்டு இப்போ இப்படி சிரிக்கிறீங்களே.! அமைச்சர் கீர்த்தனாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்
DMK ADMK ED: லாக்கான கழகங்கள்..! 22 மாஜி அமைச்சர்களை குறிவைத்த ED,சொத்து டூ ஊழல் - லிஸ்டில் யார் யார் தெரியுமா?
லாக்கான கழகங்கள்..! 22 மாஜி அமைச்சர்களை குறிவைத்த ED,சொத்து டூ ஊழல் - லிஸ்டில் யார் யார் தெரியுமா?
DMK Cong: ”மாட்டிக்கிட்ட பங்கு” மாஸ்க் போட்டுட்டு நாடகமா போடுறீங்க- திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்
”மாட்டிக்கிட்ட பங்கு” மாஸ்க் போட்டுட்டு நாடகமா போடுறீங்க- திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்
Watch Video: பட்டப்பகலில்.. திட்டமிட்டு காரால் அடித்து தூக்கப்பட்ட வக்கீல் படுகொலை - நெஞ்சை உலுக்கும் வீடியோ
பட்டப்பகலில்.. திட்டமிட்டு காரால் அடித்து தூக்கப்பட்ட வக்கீல் படுகொலை - நெஞ்சை உலுக்கும் வீடியோ
Tamilnadu Round Up: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி, காங்.சை சாடும் திமுக, அதிமுக தலைவர் விலகல் - தமிழ்நாட்டில் இதுவரை
டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி, காங்.சை சாடும் திமுக, அதிமுக தலைவர் விலகல் - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget