Anushka Shetty : மறுபடியுமா? புதிய படத்திற்காக மீண்டும் உடல்எடை அதிகரித்த அனுஷ்கா ! வியப்பில் திரையுலகம் !
ஏற்கனவே அனுஷ்கா உடல் எடை அதிகரித்ததால்தான் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என கூறப்பட்டது
இஞ்சி இடுப்பழகி :
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் அனுஷ்கா . இவர கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தில் நடிப்பதற்காக 20 கிலோ எடை அதிகரித்தார். கதாபாத்திரத்திற்காக அத்தனை மெனக்கெடல்களை ஒரு நடிகை செய்வாரா என ஒட்டுமொத்த திரையுலகுமே அனுஷ்காவை திரும்பி பார்த்தனர். அத்தனைய துணிச்சலான முடிவை எடுத்திருந்தார் அனுஷ்கா. அந்த திரைப்படம் அனுஷ்காவின் தன்னமிக்கையையும் , தைரியத்தையும் பராட்டுவதாக அமைந்ததே தவிர எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை.
தேவசேனா :
அந்த படத்திற்கு பிறகு அனுஷ்கா பாகுபலி படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார். தேவசேனா கதாபாத்திரத்திற்காக கடுமையாக உழைத்து குறிப்பிட்ட அளவு எடை குறைந்தார். அனுஷ்கா திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு யோகா ஆசிரியையாக பணியாற்றினார் என்பதால் , இந்த எடை குறைப்பு அவருக்கு எளிமையாகவே இருந்தது எனலாம். ஆனால் இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்கு முன்பிருந்த அனுஷ்காவை பார்க்கவே முடியவில்லை. அவர் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகும் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். அதனால் பல விமர்சனங்களை எதிர்க்கொண்டார். மீண்டும் அனுஷ்கா தனது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருந்த நிலையில் தற்போது அடுத்த படத்திற்காக உடல் எடையை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
மீண்டும் எடை அதிகரித்தார் :
அனுஷ்கா தற்போது மகேஷ் பி இயக்கத்தில் யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். தற்காலிகமாக அனுஷ்கா 48 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைப்பெற்று வருகிறது. முழுக்க முழுக்க நாயகியை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படவுள்ள இந்த புதிய திரைப்படத்தின் கதாபாத்திரத்திற்காக அனுஷ்கா மீண்டு எடை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால்தான் அவர் மீடியாவின் கண்களில் படாமல் இருக்கிறாராம்.ஏற்கனவே அனுஷ்கா உடல் எடை அதிகரித்ததால்தான் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என கூறப்பட்டு வரும் நிலையில் , அனுஷ்காவின் இந்த முடிவு சினிமா மீது அவருக்கு இருக்கும் அர்பணிப்பு உணர்வையும் , ஆர்வத்தையும் வெளிப்படையாகவே காட்டுகிறது .
வித்யா பாலன் :
நடிகைகள் பலர் படத்தில் பருமனான தோற்றம் வேண்டுமென்றால் செயற்கையான வழிமுறைகளைத்தான் தேர்வு செய்வார்கள் . உடல் எடை அதிகரித்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவது அத்தனை எளிமையான காரியம் ஒன்றுமல்ல. பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த வித்யா பாலன், நடிகை சில்க் ஸ்மித்தாவின் வாழ்க்கை வரலாற்று படமான டெர்ட்டி பிக்சரில் நடிப்பதற்காக 12 கிலோ எடை அதிகரித்தார் ஆனால் அது அவரது கெரியரில் மிகப்பெரிய இழப்பாக அமைந்துப்போனது. அவர் அந்த எடையை குறைக்க முடியாமல் பல ஹார்மோனல் பிரச்சனைகளையும் மன அழுத்தத்தையும் எதிர்க்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.