![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Anushka Sharma Vamika : ”கொஞ்சமாவது கத்துக்கோங்க..” : ஊடக குழுமம் மீது விமர்சனம்.. கோபத்தில் கொந்தளித்த அனுஷ்கா.. ஏன்?
கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி, விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவுக்கு முதல் குழந்தை பிறந்தது.
![Anushka Sharma Vamika : ”கொஞ்சமாவது கத்துக்கோங்க..” : ஊடக குழுமம் மீது விமர்சனம்.. கோபத்தில் கொந்தளித்த அனுஷ்கா.. ஏன்? Anushka Sharma calls out prominent media house for posting daughter Vamikas pictures Anushka Sharma Vamika : ”கொஞ்சமாவது கத்துக்கோங்க..” : ஊடக குழுமம் மீது விமர்சனம்.. கோபத்தில் கொந்தளித்த அனுஷ்கா.. ஏன்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/13/64e3e56c06d8656ed5d0abff884cc03a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த பல ஆண்டுகளாகவே, தங்களின் குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்றும் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்றும் சில நட்சத்திரங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
விராக் கோலி, அனுஷ்கா சர்மாவும் இம்மாதிரியான கோரிக்கையை விடுத்திருந்தனர். விருஷ்கா என அன்புடன் அழைக்கப்பட்டு வரும் இந்த தம்பதி, தங்கள் குழந்தை வாமிகாவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: IND vs SA, 1st T20 : எனக்கு இது முன்னவே தெரியும்; அதுதான் ட்விட்ஸ்ட்! - இந்தியாவுடனான வெற்றி குறித்து வான்டர் டுசன்
இந்நிலையில், பிரதான ஊடக நிறுவனம் ஒன்று வாமிகாவின் புகைப்படத்தை வெளியிட்டிருப்பது அனுஷ்கா சர்மாவை கடுப்பாக்கியுள்ளது. இதையடுத்து, அதிருப்தி தெரிவித்துள்ள அவர், தன்னுடைய குழந்தையின் தனியுரிமையை மதிக்காத ஊடக நிறுவனத்தை கடுமையாக சாடியுள்ளார்.
விராக் கோலி, அனுஷ்கா சர்மாவின் புகைப்படத்தை ஊடக நிறுவனத்தை சேர்ந்தவராக கருதப்படும் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட இரண்டாவது புகைபடத்தில் வாமிகா இருந்துள்ளார். இதே, அனுஷ்காவை கோபமடைய செய்துள்ளது.
இதையடுத்து, அந்த பதிவின் கமெண்ட் செக்சனில் கருத்து பதிவிட்ட அவர், "பலமுறை கேட்டுக்கொண்ட பிறகும் படங்களைக் எடுத்து வெளியிட நிறுத்த முடியாததால், அவர்களின் பெற்றோரை விட குழந்தைகளுக்கு எது சிறந்தது என்பதை டைம்ஸ் குழு அறிந்திருப்பது போல் தெரிகிறது. மற்ற ஊடக நிறுவனங்கள் மற்றும் சுதந்திர புகைப்பட கலைஞர்களிடம் இருந்து ஏதாவது கற்றுக்கொள்ளுங்கள்" என பதிவிட்டுள்ளார்.
குறிப்பிட்ட ஊடக நிறுவனத்திற்கு எதிராக விராட் கோலி, அனுஷ்கா சர்மா நடவடிக்கை எடுப்பார்களா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. இதற்கிடையே, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் வேகபந்து வீச்சாளரான ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அனுஷ்கா சர்மா நடித்துவருகிறார். மறுபுறம், விராட் கோலிக்கு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டு டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)