மேலும் அறிய

‛தென்றலா... புயலா... நீங்களே முடிவு பண்ணிக்கோங்க...’ அன்னபூரணி மீண்டும் மிரட்டல்!

‛தாயோட உணர்வுக்கு அர்த்தம் தெரியாத கேவலமான ஜென்மங்களுக்கான தளம் இது கிடையாது’

திருவண்ணாமலையில் ஆசிரமம் போட்டு அமர்ந்திருக்கும் அன்னபூரணி அரசு அம்மா, கடந்த சுதந்திர தினத்தன்று அம்மன் வடிவில் அலங்காரம் செய்து, அருளாசி வழங்கியது, சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. பிரபல சேனல்கள் வழக்கம் போல அவரை கிண்டலடித்து அந்த செய்தியை ஒளிபரப்பினர். இதனால் ஆத்திரமடைந்த அன்னபூரணி, மறுநாள் காரசாரமான வீடியோ அறிக்கையை வெளியிட்டு, தனது ஆசிரமத்திற்கு நுழைய சேனல் ஒன்றுக்கு தடை விதித்தார். மேலும் தன்னை இழிவுபடுத்தும் யூடியூப் சேனல்களையும் கடுமையாக சாடினார். இந்நிலையில், ஏன் தான் அவ்வாறு பேசினேன் என விளக்கம் அளித்து சற்று முன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அன்னபூரணி. இதோ அதில் அவர் பேசியுள்ளதாவது: 

 

‛‛மக்களுக்கு சில விசயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதாவது, என்னுடைய ஆன்மிகம் கார்ப்ரேட் ஆன்மிகம் கிடையாது. என்னுடைய ஆன்மிகம் உண்மையாக ஆன்மிகம். உண்மையான ஆன்மிக தளம். இப்போ மட்டுமல்ல,எப்போதும் என்னுடைய ஆன்மிகம் கார்ப்ரேட் ஆன்மிகமாக மாறாது. மாற்றவும் மாட்டேன்.

அப்படி மாற்றாததால் தான் இவ்வளவு எதிர்ப்புகளை நான் சந்தித்து வருகிறேன். இதுமட்டுமல்ல இன்னும் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், சத்தியம் என்ன உணர்த்துதோ, அந்த சத்தியத்திற்கு மட்டும் தான் நான் கட்டுப்படுவேன். இந்த ஆணவ கூட்டத்திற்கு கட்டுப்பட மாட்டேன். சத்தியத்தை ஒருகாலும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் .சத்தியம் என்பது சிலருக்கு புரியாது. சத்தியம் என்பது இறைவன், இயற்கை, இயற்கை சக்தி, இறை தன்னை, பிரபஞ்சம், பிரபஞ்ச சக்தி இப்படி இன்னும் நிறைய பெயர்களை கூறலாம்.

இதை தான் நான் சத்தியம் என்கிறேன். சமுதாயத்தில் ஒரு பெண் எந்த துறையில் வந்தாலும், அந்த சமுதாயம் அந்த பெண்ணை வளர விடாது. அவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து, தவறாக தான் சித்தரிக்கிறார்கள். இயற்கை தாயிடமும் அப்படி தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இயற்கையிடம் அப்படியெல்லாம் ஒரு காலும் செயல்பட முடியாது. எதற்காகவும் இந்த இயற்கையை தடுத்து நிறுத்த முடியாது. 

தாயோட உணர்வுக்கு அர்த்தம் தெரியாத கேவலமான ஜென்மங்களுக்கான தளம் இது கிடையாது. என்னுடைய ஆன்மிகம் தளம் அவர்களுக்கானது அல்ல. என்னை தேடி வரும் மக்களின் குறைகளை தீர்க்கவும், உண்மையான ஆன்மிக தாகம் உள்ளவர்களுக்கும், அவர்களுக்குள் இருக்கும் இறைத்தன்மையை உணர்த்தி, அதில் நிலை பெற வைப்பதற்கு தான் இயற்கை என் மூலம் செயல்படுகிறது. 

இயற்கை அன்பானது தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. இதமான தென்றல் காற்றை கொடுக்கும் இயற்கை தான் புயலையும் கொடுக்கிறது. அதே தான், என்னை தேடி வரும் என்னுடைய குழந்தைகளிடம் அன்பு உணர்வாக மட்டும் தான் வெளிப்படுவேன். அதே, இந்த சமுதாயத்தில் ஆணவமாக செயல்படுபவர்களிடம் ஆக்ரோஷமாக தான் வெளிப்படுவேன்,’’
என்று அன்னபூரணி அரசு அம்மா தனது வீடியோ அறிக்கையில் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...
”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?

வீடியோ

Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :
பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Embed widget