நான் முடியாதுன்னு சொன்னேன்.. ஊ சொல்றியா மாமா பாட்டின் சஸ்பென்ஸ் உடைத்த ஆண்ட்ரியா
நான் முடியாதுன்னு சொன்னேன்; டிஎஸ்பி தான் என்னை பாடவைத்தார் என்று 'ஊ சொல்றீயா' பாடல் அனுபவம் பற்றி பேசியுள்ளார் ஆண்ட்ரியா ஜெரமியா.
நான் முடியாதுன்னு சொன்னேன்; டிஎஸ்பி தான் என்னை பாடவைத்தார் என்று 'ஊ சொல்றீயா' பாடல் அனுபவம் பற்றி பேசியுள்ளார் ஆண்ட்ரியா ஜெரமியா.
அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் 'ஊ சொல்றீயா'. இந்தப் பாடலுக்கு சமந்தா நடனமாடி இருப்பார். இந்தப் பாடலையும் சமந்தாவின் நடனத்தையும் பார்க்கவே எக்கச்சக்கமான கூட்டம் படத்துக்கு சென்றது. இந்த பாடலை ஆண்ட்ரியா தான் பாடியிருந்தார். ரசிகர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை பலர் சமந்தாவின் 'ஊ சொல்றீயா' பாடலுக்கு ரீல்ஸ் செய்து இணையத்தை கலக்கினர்.
டிஎஸ்பி என் பெஸ்ட் ஃப்ரெண்ட்:
இந்தப் பாடலுக்காக அவருக்கு ஜெஎஃப்டபிள்யு விருது கிடைத்தது. இந்த விருது குறித்து ஆண்ட்ரியா மேடையில் பேசுகையில், எனக்கு டிஎஸ்பி ஒரு நீண்டகால நண்பர். நல்ல நண்பர். இன்றும் என்றும் அவர் நட்பு முக்கியமானது. நான் முதன்முதலில் பாடிய பாடலே அவருடைய இசையமைப்பில் தான். என்னை எப்போதுமே ஊக்குவிப்பார். புஷ்பா படத்தில் ஒரு பெப்பி நம்பர் பாட வேண்டும் என்று கூப்பிட்டார். நானும் சென்றேன். தெலுங்கு வெர்ஷனை எனக்கு போட்டுக் காட்டினார். சில நுணுக்கங்கள் சொல்லிக் கொடுத்தார். நானும் கேட்டேன். அப்புறம் ஒரு ஸ்டான்சா பாடினேன். ஆனால் அந்தப் பாட்டுக்கு சரியான நியாயத்தை நான் செய்யவில்லையோ என்று தோன்றியது. டிஎஸ்பியிடம் இல்ல என்னால் இந்தப் பாடலை பாட முடியாது என்று சொல்லிட்டு டிஸ்கஷன் ரூமில் வந்து உட்கார்ந்துவிட்டேன். ஆனால் அவர் விடவில்லை. என்னை வந்து தொடர்ந்து ஊக்குவித்தார். கமான் உங்களால் முடியும் என்று அவ்வளவு பேசினார். அவர் எப்பவுமே அப்படித்தான் என்னை ஊக்குவிப்பதில் அவர் தனி ரகம். மோடிவேஷனுக்கு அவர் ஒரு பேட்டரி. அந்த ஊக்குவிப்பு தான் என்னை அந்தப் பாடலைப் பாட வைத்தது. பாட்டு ஹிட்டானதற்கு முழுக் காரணமும் டிஎஸ்பி தான். இந்த மேடையில் நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ஆண்ட்ரியா அழகி..
டிஎஸ்பி விருது வழங்க ஆண்ட்ரியாவை அழைத்த போது இவர் நல்ல பாடகி மட்டுமல்ல, நடிகை, அழகானவர் என்று வர்ணித்து அழைத்தார்.
நடிகை ஆண்ட்ரியா அண்மையில் மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்தார். அந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குநர் பாலா தயாரித்து, மிஷ்கின் இயக்கிய பிசாசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானது. இப்படத்தில் நாகா, ராஜ்குமார் பிச்சுமணி, அஷ்வத் ஆகியோருடன் ராதாரவி , கல்யாணி நடராஜன், பிரயாகா மார்ட்டின் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் தெலுங்கு பதிப்பு 'பிசாச்சி' 27 பிப்ரவரி 2015 அன்று வெளியிடப்பட்டது. இப்படம் கன்னடத்தில் 'ராக்ஷசி' என்றும் இந்தியில் 'நானு கி ஜானு' என்றும் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை மிஷ்கின் உருவாக்கியுள்ளார்.