Amy Jackson Breakup: இன்ஸ்டாவில் காதலன் போட்டோவையே காணோம் - ப்ரேக்-அப் செய்கிறாரா எமி?
பரபரப்புக்கு பஞ்சமில்லாத எமியின் இன்ஸ்டா பக்கம் மற்றுமொரு யூகத்திற்கு வழிவகுத்துள்ளது.
மதராசப்பட்டினம் திரைப்படம் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக்கொண்ட வெளிநாட்டு நடிகை எமி ஜாக்சன். இவர் அயல்நாட்டு நாயகி என்பதே மறக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவுடனும், இந்தியா சினிமாவுடனும் ஒன்றிப்போனார் எமி. மதராசப்பட்டினம் கொடுத்த வெற்றிக்கு பிறகு தாண்டவம், ஐ, தெறி, 2.0 உள்ளிட்ட படங்களில் எல்லாம் நடித்தார்.பின்னர் சினிமாவுக்கு இடைவெளிவிட்ட எமி, வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு சென்றார். தன்னுடைய காதலர் ஜார்ஜ் பனாயிடோவுடன் சேர்ந்து வாழந்தொடங்கினார். அவர்களுக்கு நிச்சயதார்த்தம் மட்டுமே நடைபெற்ற நிலையில் இருவரும் தங்களது வாழ்க்கையை தொடங்கினர். நண்பர்கள், உறவினர்கள் என எமியின் நிச்சயதார்த்தம் கொண்டாட்டமாக நடைபெற்றது.
View this post on Instagram
அவர்களின் காதலுக்கு அடையாளமாய் 2019ல் எமிக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. முன்னதாக எமியின் கர்ப்பக்காலமே சோஷியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்ட விஷயம். தினம் தினம் போட்டோஷூட், உடற்பயிற்சி என எமியின் இன்ஸ்டா பக்கம் பரபரப்பாகவே இருந்த காலம். இந்த நிலையில் என்றுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாத எமியின் இன்ஸ்டா பக்கம் மற்றுமொரு யூகத்திற்கு வழிவகுத்துள்ளது.
எமி ஜாக்சன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இருந்த காதலன் ஜார்ஜின் அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். என்றுமே, மகன் - காதலன் என அன்பால் நிறைந்திருக்கும் எமி இன்ஸ்டா பக்கத்தில் இப்போது காதலன் புகைப்படங்கள் எல்லாம் காணாமல் போயுள்ளதை ரசிகர்கள் கவனித்த நிலையில் இந்த யூகம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
View this post on Instagram
இதுவரை எமி தரப்பில் இருந்து எந்தவித அதிகாரபூர்வ தகவலும் வெளியாகாத நிலையில் திருமணமாகாத நிலையில் குழந்தை. அதற்குள் விவாகரத்தா? என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேவேளையில் அயல்நாடுகளில் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வது, விவாகரத்து எல்லாம் சாதாரணம்தான் என்றும், தமிழில் நடித்திருந்தாலும் எமி ஜாக்சன் லண்டனைச் சேர்ந்தவர் என்பதை தமிழ்நாட்டு ரசிகர்கள் மறந்துவிட வேண்டாம் எனவும் இணையவாசிகள் சிலர் பதிவிட்டுள்ளனர்.
View this post on Instagram