Amudhavum Annalakshmiyum: உறவை முறித்துக் கொள்ள முடிவெடுத்த சிதம்பரம்...அதிர்ச்சியில் அமுதா...!
நான் பொய் சொல்லி கல்யாணம் பண்ணதுக்கு காரணம் இந்த சொத்தை வாங்குறதுக்கு இல்லை, எனக்கு உங்க கிட்ட இருந்து வரவேண்டிய சொத்து என் வீட்டுக்கு வந்துருச்சு என செந்தில் சொல்கிறார்.
அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் அமுதாவிற்கு சேர வேண்டிய சொத்துக்களை சிதம்பரம் பிரித்து கொடுக்க முடிவு செய்யும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
விறுவிறுப்பாக செல்லும் சீரியல்
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர்.
தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக இருக்கும் செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்கிறார் அமுதா. அந்தக்காதல் திருமணம் வரை சென்ற நிலையில் செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதன் பிறகு இந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பது விறுவிறுப்பாக செல்வதால் ரசிகர்களின் பேவரைட் சீரியலாக அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளது.
முன்னதாக அன்னலட்சுமியை வட்டிக்கடைக்காரன் அவமானப்படுத்திய நிலையில் விஷயம் தெரிந்த பிறகு அமுதா அன்னலட்சுமி, புவனாவை அழைத்துக் கொண்டு மார்க்கெட்டுக்கு வருகிறார். அங்கு அன்னலட்சுமியை பார்க்கும் வட்டிக்கடைக்காரன் என்ன பணம் கொண்டு வந்துட்டியா கொடு கொடு என கேட்டு அருகில் வர அவரை விலக்கி விட்டு வரும் அமுதா அடிக்கிறாள்.மேலும் சண்டையில் அமுதா வட்டிக்கடைக்காரன் வேட்டியை உருவி அவமானப்படுத்துகிறார். இனி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
View this post on Instagram
அமுதா வீட்டில் தூங்கிக் கொண்டிருக்க அங்கு வரும் செந்தில் அவளைப் தொட்டுப் பார்த்து ஃபீல் செய்கிறான். இதனையடுத்து சிதம்பரத்திடம் நாகு அமுதா நடந்து கொண்ட விதம் சரி இல்லை என்றும், வட்டிக்கு வாங்குன பணத்தை குடுத்து தானே ஆகணும். அதை விட்டுட்டு அவனை அசிங்கப்படுத்துனா நியாயமா என கேட்கிறாள். இப்ப அவன் போலீசுல கம்பளைண்ட் கொடுத்தா யாருக்கு அசிங்கம் என கேட்க சிதம்பரம் யோசிக்கிறார்.
தொடர்ந்து பஞ்சாயத்து ஆட்கள் செந்தில் வீட்டிற்கு வந்து அமுதாவிடம் உங்க அப்பா காசை வெட்டி விட்டு உறவை முறிச்சிகிடலாம்னு சொன்னாரு. உனக்கு குடுக்க வேண்டியதை பிரிச்சி குடுத்துரலாம்னு சொன்னாரு.. நீ பஞ்சாயத்துக்கு வந்துரும்மா என சொல்லி சென்ற நிலையில் அமுதா பஞ்சாயத்திற்கு வர மறுக்கிறாள். இதனால் செந்தில் பஞ்சாயத்திற்கு கிளம்பி செல்ல மாணிக்கம், அமுதா, அன்னலட்சுமியிடம் செந்தில் பஞ்சாயத்துக்கு போனதை சொல்ல, அன்னலட்சுமி மாணிக்கத்தை திட்டுகிறாள்.
இந்த பக்கம் பஞ்சாயத்தில் செந்திலிடம் காசை வெட்டி போடுவதற்கு தயாராகி சொத்தை பிரித்து பணம் கொடுக்க அவரோ அதை வாங்க மறுக்கிறார். நான் பொய் சொல்லி கல்யாணம் பண்ணதுக்கு காரணம் இந்த சொத்தை வாங்குறதுக்கு இல்லை, எனக்கு உங்க கிட்ட இருந்து வரவேண்டிய சொத்து என் வீட்டுக்கு வந்துருச்சு என சொல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெற்றுள்ளது.