Ramayan :ஆதிபுருஷ் பட சர்ச்சைக்கிடையே மீண்டும் ஒளிபரப்பாகும் ராமாயணம்... எந்த டிவி சேனலில் தெரியுமா?
தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்ற ராமாயணம் தொடர் தற்போது மீண்டும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
1987ஆம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி வரவேற்பைப் பெற்ற ‘ராமாயணம்’ தொடர் தற்போது மீண்டும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
ராமானந்த சாகர் தயாரிப்பில் உருவான ‘ராமாயணம்’ தொடர், 1980 காலக்கட்டத்தில் தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரந்தோறும் ஒளிபரப்பானது. இதில் இந்தி நடிகர் அருண் கோவில் ராமராகவும், நடிகை சிபிகா சிக்லியா சீதையாகவும், குத்துச்சண்டை வீரர் தாரா சிங் அனுமனாகவும் நடித்திருந்தனர் லஷ்மண் கதாபாத்திரத்தில் சுனில் லஹிரியும் நடித்தனர்.
அதன்பிறகு கொரோனா காலகட்டத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ‘ராமாயணம்’ தொடர் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சமீபத்தில் ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியான ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் கடும் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மோசமான கிராபிக்ஸ், சர்ச்சை வசனங்கள், ராமர், சீதை, அனுமார் குறித்த சித்தரிப்பு உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்திற்குள்ளாயின.
இதற்கிடையே அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் படத்தை தடை செய்யக்கோரியும், ஓடிடியில் வெளியிடக் கூடாது என்றும் வலியுறுத்தி இருந்தனர். ராமர் மற்றும் அனுமன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ஆதிபுருஷ் படம் அமைந்துள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்துக்கள், சனாதன தர்மத்தை அவமதிக்கும் வகையில் ஆதிபுருஷ் படத்தில் காட்சிகள் அமைந்துள்ளதாகவும், ஆதிபுருஷ் இயக்குனர் ஓம் ராவத் மீது வழக்குப் பதிவு செய்ய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தினர் கடிதத்தில் வலியுறுத்தி இருந்தனர்.
இத்தகைய சூழலில் ராமானந்த சாகரின் ‘ராமாயணம்’ தொடர் மீண்டும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. ஷெமரூ டிவியில் (Shemaroo TV ) இந்த தொடர் வரும் ஜூலை 3 முதல் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. ராமாயணம் மீண்டும் ஒளிபரப்பு செய்யவுள்ளதை அடுத்து ரசிகர்கள் இந்த தொடரை வேறொரு நேரத்தில் ஒளிபரப்புமாறு கேட்டுக்கொண்டதுடன், மேலும் சில தொடர்களை ஒளிபரப்புமாறு கேட்டுக்கொண்டனர்.
ராமாயணம் தொடர் இந்தியாவில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு பெரும் சாதனை படைத்தது. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இந்த தொடரை காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினர். இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக ராமாயணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Minister Ponmudi: சொத்துக் குவிப்பு வழக்கு - அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு