பாராட்டுகளை குவித்து ட்ரெண்டிங்கில் இருக்கும் அமலா பாலின் 'தி டீச்சர்'
அமலா பாலின் 'தி டீச்சர்' திரைப்படம், டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் மட்டுமல்லாமல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருக்கிறது.
நட்மெக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அமலா பால் நடிப்பில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான 'தி டீச்சர் ' திரைப்படம் இணையவாசிகளின் பாராட்டை பெற்று ட்ரெண்டிங்கில் முதலிடத்தினை பிடித்திருக்கிறது.
விவேக் இயக்கத்தில் மலையாளத்தில் தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, நெட்ப்ளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் டிசம்பர் 23ஆம் தேதியன்று வெளியானது.
’ஜெய் பீம்’ புகழ் அனுமோல், ஹக்கீம் ஷாஜகான், செம்பன் வினோத், கல்யாணி, மஞ்சு பிள்ளை, நந்து, மாலா பார்வதி, தினேஷ் பிரபாகர், கால்பந்தாட்ட வீரரும், நடிகருமான ஐ. எம். விஜயன், உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் 'தி டீச்சர்' படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிஷெட்டி, ப்ருத்வி ராஜ் மற்றும் VTK பிலிம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான உடற்கல்வி ஆசிரியரான நடிகை அமலா பால், தன்னை துன்புறுத்தியவர்களை தேடிக் கண்டறிந்து பழி வாங்குவதுதான் இப்படத்தின் திரைக்கதை. குறிப்பாக இப்படத்தில் அமலா பாலின் நடிப்பு பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
View this post on Instagram
த்ரில்லர் ஜானரில் அமைந்திருப்பதால் இந்தப் படத்தின் திரைக்கதை, ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இத்திரைப்படம், டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் மட்டுமல்லாமல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Chinmayi On Obscene Troll : ”இப்படி பேசும் ஆண்கள் தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர்களா?” நயன்தாரா குறித்த ஆபாச ட்ரோல்.. சின்மயி பதிலடி..