Chinmayi On Obscene Troll : ”இப்படி பேசும் ஆண்கள் தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர்களா?” நயன்தாரா குறித்த ஆபாச ட்ரோல்.. சின்மயி பதிலடி..
”இந்த ஆண்கள் எல்லாம் தாய்ப்பால் குடித்து வளர்ந்திருப்பார்களா என நான் வியக்கிறேன். தங்கள் மகன்கள் கணவன்மார்கள் முன்பும் கூட மகள்களை சில பெண்கள் துப்பட்டா அணியச் சொல்வதில் ஆச்சர்யமில்லை” - சின்மயி
’கனெக்ட்’ ப்ரீமியர் ஷோவுக்கு வருகை தந்த நயன்தாராவைக் குறிவைத்து வந்த ஆபாச பதிவுகளுக்கு பாடகி சின்மயி பதிலடி தந்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாடகி சின்மயி, பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்கள் குறித்து தொடர்ந்து தன் சமூக வலைதளப் பக்கங்களில் குரல் கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் முன்னதாக ’கனெக்ட்’ பட ப்ரீமியர் ஷோவுக்கு வருகை தந்த நயன்தாராவின் ஆடையைப் பற்றி வந்த ஆபாச கமெண்டுகளுக்கு பதிலடி தந்து சின்மயி பகிர்ந்துள்ளார்.
திருமணத்துக்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் பெரிதாக ஒன்றாகக் கலந்துகொள்ளாத நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி கனெக்ட் பட ப்ரீமியர் ஷோவுக்கு இணைந்து வந்திருந்தது சமூகவலைதளங்களில் பெரிதும் கவனம் ஈர்த்தது.
#Connect SPECIAL PREMIERE 🌟
— Rowdy Pictures (@Rowdy_Pictures) December 19, 2022
Lady Superstar #Nayanthara is all smiles with her entry here!@VigneshShivn #Nayanthara @AnupamPKher #Sathyaraj #VinayRai @haniyanafisa @Ashwin_saravana @SonyMusicSouth pic.twitter.com/3ikdiQcoyk
இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்று பகிர்ந்திருந்த கனெக்ட் ப்ரீமியர் ஷோ விழாவின் வீடியோவில் நயன்தாராவின் உடை, மார்பகம் குறித்து ஆபாச கமெண்டுகள் நிரம்பி வழியத் தொடங்கின.
இந்நிலையில், நயன்தாராவின் மீது சமூக வலைதளங்களில் நிகழ்த்தப்படும் ஆபாச வன்முறை குறித்து சாடியும் தனது கமெண்டை தடை செய்த தனியார் ஊடகத்தையும் சாடியும் பாடகி சின்மயி தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
”இந்த ஆண்கள் எல்லாம் தாய்ப்பால் குடித்து வளர்ந்திருப்பார்களா என நான் வியக்கிறேன். தங்கள் மகன்கள் கணவன்மார்கள் முன்பும் கூட மகள்களை சில பெண்கள் துப்பட்டா அணியச் சொல்வதில் ஆச்சர்யமில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், தங்கள் மகள் சகோதரிகளிடம் கூட இந்த ஆண்களால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாதா எனவும் கடுமையாக சாடி பதிவிட்டுள்ள சின்மயி, பாலியல் கல்வி ஆசிரியர் ஒருவரது கமெண்டை நீக்கிவிட்டு ஆபாச கமெண்டுகளை தனியார் ஊடகம் ஊக்குவிப்பதாகவும் பகிர்ந்துள்ளார்.
விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள கனெக்ட் படத்தில் நடிகர்கள் வினய், சத்யராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இந்தி சினிமாவின் அனுபவ நடிகர் அனுபம் கெர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.
இத்திரைப்படத்துக்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரியும் ரிச்சர்ட் கெவின் எடிட்டராகவும் பணியாற்றியுள்ளனர்.