முதல் நாளே RRR பட சாதனையை அடித்து நொறுக்கிய 'புஷ்பா 2'! பிரமிக்க வைத்த பாக்ஸ் ஆபீஸ் வசூல்!
Pushpa 2 Box Office Collection Day 1: அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களாக படப்பிடிப்பில் இருந்த 'புஷ்பா 2' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி பிரமிக்க வைத்துள்ளது.
Pushpa 2 Box Office: அல்லு அர்ஜுன் ரசிகர்களின் இமாலய எதிர்பார்ப்புக்கு மத்தியில் டிசம்பர் 5ஆம் தேதி, (நேற்று) உலகம் முழுவதும் 12,000 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'புஷ்பா 2'.
புஷ்பா 2:
செம்மர கடத்தலை மையப்படுத்தி, இந்த படத்தின் முதல் பாகம் எடுக்கப்பட்டிருந்த நிலையில் விட்ட இடத்திலேயே இரண்டாவது பாகத்தை இயக்குனர் சுகுமார் துவங்கி இருந்தார். ஒரு சாமானிய மனிதன் எப்படி ஒரு சாம்ராஜ்யத்தை கட்டி ஆளும் அளவுக்கு வளர்கிறார்? அவரின் பின்னணி என்ன எதிரிகளால் வரும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார் என, ஆக்சன் - எமோஷன் கலந்த திரைப்படமாக 'புஷ்பா 2' திரைப்படம் வெளியானது.
புஷ்பா படத்தின் முதல் பாகத்தில், கதாநாயகியாக நடித்திருந்த ராஷ்மிகா தான் இந்த படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். 'புஷ்பா 2' திரைப்படம் ஃப்ரீ புக்கிங் மூலமாகவே, 100 கோடி வசூலித்த நிலையில், தற்போது முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகி தென்னிந்திய திரையுலக ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.
RRR பட வசூல் சாதனை முறியடிப்பு
அதன்படி முதல் நாளிலேயே, தெலுங்கில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை படைத்த RRR திரைப்படத்தின் வசூலை அடித்து நொறுக்கி உள்ளது 'புஷ்பா 2'. முதல் நாளில் சுமார் ரூ.175 .1 கோடி வசூலித்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புஷ்பா 2 படத்தின் வசூல்:
தெலுங்கில் ரூ.95.1 கோடியும், ஹிந்தியில் ரூ.67 கோடியும், தமிழில் ரூ. 7 கோடி ரூபாயையும் இப்படம் வசூலித்துள்ளதாம். கன்னட ரசிகர்கள் மத்தியில் ரூ.1 கோடியும், கேரளாவில் ரூ.5 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் நாளே 'புஷ்பா 2' கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், விமர்சனங்களை தாண்டி இப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இதுவரை தெலுங்கில் வெளியான 'RRR' திரைப்படம் ரூபாய் 158 கோடி, முதல் நாளில் வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையை நிகழ்த்தி இருந்த நிலையில், அந்த சாதனையை 'புஷ்பா 2' முறியடித்துள்ளது.