(Source: Poll of Polls)
நான்காம் தலைமுறையும் வந்தாச்சு.... சமந்தா படத்தில் அறிமுகமாகும் அல்லு அர்ஜூன் மகள்!
குழந்தைகளுக்கான ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் குழந்தை மாடலாகவும் அல்லு அர்ஹா உள்ளார்.
தமிழ் , தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2010ஆம் ஆண்டு ’பானா காத்தாடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தனது க்யூட் நடிப்பால் பலரையும் கவர்ந்த சமந்தாவிற்கு அடுத்தடுத்து விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது நட்சத்திர நடிகை என்ற அங்கீகரத்தை தன் வசவம் வைத்துள்ள சமந்த தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு நாகார்ஜுனன் மகனும் தெலுங்கு நடிகருமான நாக சைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன போதிலும் படங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா , தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.
தற்போது விக்னேஷ் சிவனின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் தெலுங்கில் ‘ சாகுந்தலம்’ ஆகிய இரண்டு படங்களை கையில் வைத்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக சாகுந்தலம் உருவாகி வருகிறது. இந்த படத்தை குணசேகர் இயக்கி வருகிறார். நீலிமா குணா மற்றும் தில் ராஜூ ஆகியோர் படத்தை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் படத்தில் பிரபல டோலிவுட் நடிகரான ‘அல்லு அர்ஜூனின்’ மகள் அஹ்ரா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகவுள்ளார். 4 வயதாகும் அல்லு அர்ஹாவிற்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். குழந்தைகளுக்கான ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் குழந்தை மாடலாகவும் அல்லு அர்ஹா உள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள அல்லு அர்ஜூன் , “எனது குடும்பத்தின் நான்காவது தலைமுறையும் தற்போது நடிக்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது . (அல்லு அர்ஜூன் தாத்தா , அப்பா எல்லோரும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள் ). இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு எனது நன்றி. மிக அழகாக அர்ஹா இந்த படத்தில் அறிமுகமாக உள்ளார் “ என தெரிவித்துள்ளார்.
A proud moment for the Allu family to announce that the fourth generation, #AlluArha will be making her debut with #Shakuntalam movie. I want to thank @Gunasekhar1 garu & @neelima_guna garu for giving my daughter this beautiful movie as her debut . pic.twitter.com/iPfXQaqJCk
— Allu Arjun (@alluarjun) July 15, 2021
இந்த அறிவிப்பை கண்ட அஹ்ராவின் ஃபேன்ஸ் குஷியில் உள்ளனர். அவ்வபோது வெளியாகும் அல்லு அர்ஜூன் மற்றும் அவரது மகளின் வீடியோ இணையத்தில் வைரலாக கலக்கும் . மழலைத்தனம் மாறாத அர்ஹாவின் பேச்சு மற்றும் வெள்ளந்தியான சிரிப்பில் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது என ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.