கமல் பேரனாக நடித்த குட்டி பையன் இன்று என்ன செய்கிறார் தெரியுமா?
'சிப்பிக்குள் முத்து' படத்தில் கமல் பேரனாக நடித்து அந்த சிறுவன் இன்று தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். அவர் யார் தெரியுமா?

இந்தியா சினிமாவின் மிகச்சிறந்த படைப்பாளிகளில் மிக முக்கியமானவர் கே. விஸ்வநாத். தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அவர் தாதாசாஹேப் பால்கே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தெலுங்கு திரையுலகுக்கு ஒரு மரியாதையை பெற்று கொடுத்தவர். 1986ம் ஆண்டு 'சுவாதி முத்யம்' என்ற பெயரில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. பின்னர் அது தமிழில் 'சிப்பிக்குள் முத்து' என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசன், ராதிகா, சரத் பாபு, ஒய். விஜயா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்து இருந்தார்.
இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் என்றாலும் ஆறு வயது சிறுவனுக்கான மனவளர்ச்சி கொண்டவராக கள்ளம் கபடம் இல்லாதவராக மிக சிறப்பாக நடித்திருந்தார் கமல்ஹாசன். இளம் விதவையான ராதிகா தனது ஐந்து வயது மகனுடன் சகோதரனின் வீட்டில் தஞ்சம் அடைய அண்ணியின் கொடுமைகள் அனைத்தையும் வேறு வழியில்லாமல் சகித்து கொண்டு வாழ்கிறார். ராதிகாவின் கதையை கேட்ட கமல்ஹாசன் அவரை மணந்து கொள்கிறார். பின்னர் இருவரும் சேர்ந்து சென்னைக்கு குடிபெயர்ந்து சந்தோஷமாக வாழ்கிறார்கள்.
கமலின் அப்பாவித்தனத்தை போக்கி பொறுப்புள்ளவராக மாற்றுகிறார் ராதிகா. இருவருக்கும் ஒரு மகன் பிறக்கிறான். வருடங்கள் கடந்ததும் ராதிகா உயிர் பிரிந்ததும் அவளுடைய நினைவாக கமல்ஹாசன் நீண்ட காலம் பழைய வீட்டில் வாழ்கிறார். பின்னர் மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் பழைய வீட்டை விட்டு கிளம்புகிறார். மனைவியின் நினைவாக துளசி செடியை மட்டும் தன்னுடன் எடுத்து செல்கிறார்.
பேரனாக அல்லு அர்ஜுன் :
இப்படத்தில் நடிகர் கமல்ஹாசனின் பேர குழந்தையாக நடித்தவர் இன்று தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக சர்வதேச அளவில் பிரபலமாக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன். கமல் பேரனாக நடித்த அந்த சிறுவன் பிற்காலத்தில் மிக பெரிய நடிகராக தெலுங்கு திரையுலத்தையே கலக்கும் ஒரு நடிகராவார் என யாரும் அப்போது எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
புஷ்பா நாயகன் :
2003ம் ஆண்டு வெளியான 'கங்கோத்ரி' திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான அல்லு அர்ஜுன் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். புஷ்பா படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர். பான் இந்திய நடிகராக ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக இருக்கும் அப்படத்திற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

