பஞ்சாபி முறையில் நடைபெறும் ஆலியா - ரன்பீர் திருமணம்: சங்கீத், மெஹந்தி, ஹல்தி திட்டங்கள்!
இத்திருமணத்திற்கு வழக்கம் போல் சல்மான் கான் அழைக்கப்படவில்லை. அதோடு சல்மான் கான் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோரின் முன்னாள் காதலியான கத்ரீனா கைஃப்பும் திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை.
அலியாபட் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பிரிட்டிஷ் பெண். 1999 -ல் 'சங்கர்ஷ்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் கரண் ஜோஹரின் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் (2012) இல் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். கடந்த 2014-ல் வெளியான ஹைவேயில் "சூஹா சாஹா" பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பாடியிருந்தார் அலியா. இவரது திறமைக்கு கிடைத்த பரிசாக இதுவரை நான்கு பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல பாராட்டுகளை பெற்றுள்ளார். மறைந்த நடிகர் ரிஷி கபூரின் மகனான ரன்பீருக்கும், பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரான மகேஷ் பட்டின் மகளான ஆலியாவும் கடந்த 2018 -ல் இருந்து காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இவர்கள் சமீபத்தில் இணைந்து நடித்துள்ள பிரம்மாஸ்திரா படத்தில் நடிக்கையில் காதல் மலர்ந்தாகவும் ஒரு பேச்சுண்டு. பாலிவுட் பிரபலங்களான இருவருக்கும் கடந்த 2020-ல் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் கொரோனா நெருக்கடியால் திருமணமும் தடைபட்டது. அதன் பிறகு இருவரும் இம்மாதம் 17-ம் தேதி திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர். நடிகை கத்ரீனா கைஃப் போன்று ரன்பீர் கபூரும் தனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் செம்பூரில் உள்ள ஆர்.கே.பங்களாவில் திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
குடும்பத்தில் எது நடந்தாலும், அவர்களின் பூர்வீக குடும்ப வீடான ஆர்.கே.பங்களாவில் நடப்பது வழக்கம். கபூர் குடும்பத்தில் உள்ள அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ரன்பீர் கபூர் குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பஞ்சாப் முறைப்படி நடக்க இருக்கும் இத்திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். கபூர் குடும்பத்திற்கு 8 மிகவும் ராசியான நம்பர் என்பதால் அவர்கள் திருமண நாளை 17ம் தேதியாக முடிவு செய்திருப்பதாகக் கபூர் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. இத்திருமண சடங்குகள் வரும் 13-ம் தேதி தொடங்க இருக்கிறது. 4 நாட்கள் நடக்கும் இத்திருமண சடங்குகள் 17-ம் தேதி திருமணத்தோடு முடிவடையும். 16-ம் தேதி அதிகாலையில் திருமணம் நடக்க இருப்பதாகவும் மற்றொரு தகவல் கிடைத்திருக்கிறது. திருமணம் குறித்து ரன்பீர் குடும்பத்தினர் முறைப்படி அறிவிக்காமல் இருப்பதால் திருமண தேதி குறித்து பல்வேறு யூகங்கள் பரவி வருகிறது.
இத்திருமணத்திற்கு வழக்கம் போல் சல்மான் கான் அழைக்கப்படவில்லை. அதோடு சல்மான் கான் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோரின் முன்னாள் காதலியான கத்ரீனா கைஃப்பும் திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை. கத்ரீனாவுடன் ரன்பீர் 7 ஆண்டுகள் காதலில் இருந்தார். அதன் பிறகு அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு இப்போது கத்ரீனா கைஃப் நடிகர் விக்கியை காதலித்துத் திருமணமும் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
13 ஆம் தேதி மெஹந்தி விழாவுடம் துவங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி ரன்பீர் கபூரின் தாய் நீது கபூர்தான் மாப்பிளை உடையை தேர்வு செய்துள்ளாராம், இந்த உடையை வடிவமைத்தவர் மனிஷ் மல்ஹோத்ரா என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஹல்தி மற்றும் சங்கீத் விழாவும் ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறும். தகவல்களின்படி, ரன்பீர் மற்றும் ஆலியாவின் பெரிய நாள் ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெறும். திருமண விழா அனைத்திற்கும் பிரபல டிசைனர்கள் ஆன மனிஷ் மல்ஹோத்ரா மற்றும் சபயா சாச்சி ஆகியோரின் உடைகளையே தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆலியாவின் நெருங்கிய நண்பர்கள் ஆன அகன்ஷா ரஞ்சன் மற்றும் அனுஷ்கா ரஞ்சன் ஆகியோர் பேச்சிலர் பார்ட்டியை முன்னிருந்து நடத்துகின்றனராம்.