
Vidamuyarchi: ஆட்டம் ஆரம்பம்! முடிந்தது அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங்! செம்ம அப்டேட்ஸ் இதோ
Vidamuyarchi : அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு முழுவதும் நிறைந்துவிட்டதாகவும், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். உச்ச நட்சத்திரமாக உலா வரும் இவரது நடிப்பில் கடந்த ஓராண்டாக உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. பல சிக்கல்களுக்கு பிறகு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகாமல் இருந்ததால் படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவியது.
விடாமுயற்சி நியூ க்ளிக்ஸ்:
இதையடுத்து, மீண்டும் படப்பிடிப்பு வேகத்தை அதிகரித்த படக்குழு தற்போது பெரும்பாலான படப்பிடிப்பை முடித்துவிட்டது. இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், படத்தின் அடுத்தகட்ட பணிகளை படக்குழு மேற்கொள்ள உள்ளது. சமீபநாட்களாக விடாமுயற்சி படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த படத்தில் நடிகர்கள் அஜித், அர்ஜூன், ஆரவ் ஆகியோருடன் நடிகைகள் த்ரிஷா, ரெஜினா ஆகியோர் உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த படத்தில் அஜித் – த்ரிஷா ஜோடியாக நடிக்கின்றனர். சஞ்சய்தத் இந்த படத்தில் சஞ்சய்தத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மிகுந்த எதிர்பார்ப்பு:
இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே வரவேற்பை பெற்றுள்ளது. மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் – அர்ஜூன் இணைவதாலும், மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குவதாலும், துணிவு படத்திற்கு பிறகு வெளியாகும் படம் என்பதாலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது ஏற்பட்டுள்ளது.
லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் என எதுவும் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் அடுத்தடுத்து விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜானிலும், அரபு நாட்டிலும் எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ஷன் மற்றும் குடும்ப சென்டிமென்டாக இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி விருந்தா?
லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், லைகாவின் மற்றொரு தயாரிப்பான விடாமுயற்சி தீபாவளி வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பும் ஒரு புறம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

