Thunivu: டிசம்பர் 31-ந் தேதி ரிலீசாவது துணிவு டீசரா..? ட்ரெய்லரா..? புதிய ப்ரோமோஷனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!
புதிதாக போஸ்டரை பல ஆயிரம் அடி உயரத்தில் பறக்க விட்டு ஹாலிவுட்டிற்கே ட்ஃப் கொடுக்கும் வகையில் மாஸ் காட்டியுள்ளனர் துணிவு படக்குழுவினர்.
![Thunivu: டிசம்பர் 31-ந் தேதி ரிலீசாவது துணிவு டீசரா..? ட்ரெய்லரா..? புதிய ப்ரோமோஷனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு..! Ajith starring Thunivu Promotion sky diving stuntmen displays Thunivu poster above Palm Islands in Dubai Thunivu: டிசம்பர் 31-ந் தேதி ரிலீசாவது துணிவு டீசரா..? ட்ரெய்லரா..? புதிய ப்ரோமோஷனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/26/f11317bebf606125b3248108fd38e40c1672060324245572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
துணிவு:
அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாகவிருக்கும் படம் துணிவு. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தின் மீது நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. பொதுவாகவே ஒரு படம் வெளியாகும் முன்னர், பலவிதமான புரமோஷன் வேலைகள் நடக்கும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக ஹெச். வினோத் - போனி கபூர்- அஜித் கூட்டணி எப்போதும் இல்லாத அளவிற்கு, துணிவு படத்திற்காக பயங்கரமான புரமோஷனில் ஈடுபட்டுள்ளது.
ஸ்கைடைவிங்கில் அசத்திய ப்ரோமோஷன்:
துணிவு படம் குறித்து அறிவிப்பு வந்தவுடன், அஜித்தின் பைக் ஸ்டில்ஸ், அஜித்தின் புது லுக் ஸ்டில்ஸ் உள்ளிட்ட அப்டேட்கள் அடுக்கடுக்காக வந்த வண்ணம் உள்ளன. தற்போது, படத்தின் ப்ரோமோஷன் வீடியோ ஒன்று வெளியாகிவுள்ளது. இதில், ஸ்கை டைவிங் செய்யும் கலைஞர்கள் சிலர், ஹெலிகாப்டரில் இருந்து குதித்து துணிவு படத்தின் போஸ்டரை வானத்தில் பறக்கவிட்டுள்ளனர்.
வந்துடுச்சு நம்ம காலம் ஏரி களக்கு 🔥🔥🔥🔥🔥🔥#Thunivu #Ajithkumar pic.twitter.com/uj1y6aINtm
— 𝗩 𝗠 𝗧 ッ (@VMT_Official) December 26, 2022
அந்த போஸ்டரில், “31 ஆம் தேதி டிசம்பர் - துணிவு டே ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நாளில் டீசர் வருமா..? ட்ரெயலர் வருமா..? அல்லது வேறு ஏதாவது நிகழ்ச்சி நடைபெறுமா..? என்பது தெரியவில்லை. அதுகுறித்து அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வரவில்லை.
View this post on Instagram
இந்த வீடியோ தற்போது இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. வழக்கமாக துபாயில் உள்ள ‘புர்ஜ் கலிஃபா’ கட்டிடத்தின் மேல் படத்தின் போஸ்டர் திரையிடுவர். ஆனால், புதிதாக போஸ்டரை அந்தரத்தில் பறக்க விட்டு ஹாலிவுட்டிற்கே ட்ஃப் கொடுக்கும் வகையில் மாஸ் காட்டியுள்ளனர். துணிவு படத்தின் உள்ளூர் விநியோகத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வாங்க, வெளியூர் விநியோகத்தை லைகா புரடக்ஷன்ஸ் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
துணிவு படத்தின் பாடல்கள்
துணிவு படத்தில் அனிருத் குரலில் இடம்பெற்றுள்ள “சில்லா சில்லா”பாடல் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிளான கேங்ஸ்டா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த பாடகரான சபீர் இந்த பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை, AK ஆந்தம் என இசையமைப்பாளர் ஜிப்ரான் குறிப்பிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)