Ajith Kumar Viral Pic: ஃபேமிலி பார்ட்டி.. ஓ இதுதான் விசேஷமா..! வைரலான அஜித் குடும்ப புகைப்படங்களின் கதை..
திடிரென்று அஜித்தின் குடும்ப புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின. அதற்கான காரணம், அவர்கள் திடிரென்று சந்தித்துக்கொண்டது ஏன் உள்ளிட்டவற்றை குறித்து இங்கு பார்க்கலாம்.
நேற்றிலிருந்து அஜித்தும் அவரது குடும்பத்தினர் சார்ந்த புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறன. AK61 படத்திற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், அந்தப்படத்தின் புதிய லுக்கை ஏற்கனவே அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படம் கருப்பு வெள்ளையாக இருந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படங்களில் தாடி, கடுக்கன், சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல் என அஜித்தின் 61 லுக் அப்பட்டமாக தெரிந்தது. இந்த நிலையில் திடிரென்று ஏன் இந்த புகைப்படங்களை ரிச்சர்ட் ரிஷி வெளியிட்டார். எதாவது விஷேசமா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
Happy birthday Aadhu boy , like father like son. #AjithKumar #HBDAadvikAjith pic.twitter.com/CNWdpk6tuP
— rishirich (@richardrishi) March 2, 2022
அதற்கான பதில் என்னவென்றால், அஜித்திற்கு மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் ரொம்பவே ஸ்பெஷலாம். அவருக்கு கடந்த ஜனவரி 3 ஆம் தேதி 14 ஆவது பிறந்தநாள். ஆனால், கொரோனா சூழ்நிலை காரணமாக பிறந்தநாளை வீட்டிலேயே சாதரணமாக கொண்டாடியிருக்கிறார்கள் அஜித் குடும்பத்தினர். இந்த நிலையில் நேற்று அதாவது மார்ச் 2 ஆம் தேதி மகன் ஆத்விக்கின் பிறந்தநாள் வந்திருக்கிறது. இந்த நிலையில் மகனின் பிறந்தநாளோடு சேர்த்து விடுபட்ட மகளின் பிறந்தநாளையும் சேர்த்து கொண்டாட திட்டமிட்ட அஜித், பெங்களூரில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்.
Amarkalam pic.twitter.com/PxZptcXfuz
— rishirich (@richardrishi) March 2, 2022
அஜித் நடிப்பில் உருவான 'வலிமை' படம் கடந்த 24-ம் தேதி வெளியா திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. .ஏகே 61 படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிக்காக ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனை அடுத்து, மார்ச் 9-ம் தேதி படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக நாயகி பூஜா ஹெக்டே நடிக்கலாம் எனவும், அனிருத் இசையமைக்கலாம் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.
தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படங்கள், அடுத்தப்படத்துக்கான லுக் என்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். AK 61 படத்துக்காக அஜித் உடல் எடையை அதிகளவில் குறைக்கவுள்ளதாகவும், அதற்கான உடற்பயிற்சியில் தீவிரமாக அவர் இறங்கவுள்ளதாகவும் ஏற்கெனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.