Ajith Kumar Statue: துணிவு கெட் அப்பில் அஜித் சிலை... வெற்றிக் கொண்டாட்டத்தில் ’ஏ.கே.’ ரசிகர்கள்..!
திருநெல்வேலி அஜித் ரசிகர்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த சிலை சென்னை ரோஹினி திரையரங்கில் நேற்று காட்சிக்காக வைக்கப்பட்டது.

துணிவு பட வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடிகர் அஜித்துக்கு சிலை வைத்து அவரது ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
துணிவு வெற்றி:
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பின் தயாரிப்பாளர் போனி கபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் - நடிகர் அஜித் ஆகியோர் கூட்டணியில் வெளியான படம் “துணிவு”. இந்த படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜான் கொக்கைன், சமுத்திரகனி, ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள், வீரா, அஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். துணிவு படம் பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது.
துணிவு படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றிய நிலையில் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக நள்ளிரவு 1 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக்கோலம் என்பது போல நீண்ட நாட்களுக்குப் பின் அஜித் ரசிகர்களுக்கு திருப்தியளிக்கும் விதமாக துணிவு படம் அமைந்துள்ளது. மேலும் வசூலிலும் துணிவு படம் சாதனைப் படைத்து வருகிறது.
அஜித்திற்கு சிலை:
மேலும் பொங்கலுக்கு வெளியாகியுள்ள விஜய்யின் வாரிசு படத்தைக் காட்டிலும் துணிவு படத்துக்கு அதிக அளவில் ப்ரோமோஷன்கள் செய்யப்பட்டன. துணிவு படம் தான் பொங்கல் பண்டிகையின் ரியல் வின்னர் என போஸ்டர் வெளியிட்டு போனி கபூர் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
முன்னதாக துணிவு படம் வெளியான நான்கு நாட்களில் மொத்தம் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை புரிந்துள்ளது. இந்நிலையில் துணிவு படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் துணிவு பட கெட் அப்பில் நடிகர் அஜித்துக்கு அவரது ரசிகர்கள் சிலை வைத்து உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
Happy to Unveil the Grand statue of #AK to Public which has been done by Team @TIRUNELVELIAFC
— Ramesh Bala (@rameshlaus) January 15, 2023
Get Ready Tirunelveli 👍🏻 Very soon.. #AKStatueAtTirunelveli
Creator: @csrartstudio#Ajithkumar pic.twitter.com/M1U3O6euYI
திருநெல்வேலி அஜித் ரசிகர்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த சிலை, நேற்று சென்னை ரோஹினி திரையரங்கில் காட்சிக்காக வைக்கப்பட்டது.
ரசிகர்கள் உற்சாகம்:
தொடர்ந்து இந்த சிலை இன்று அம்பத்தூர் ராக்கி சினிமாஸில் வைக்கப்படும் என்றும் ரசிகர்கள் சென்று புகைப்படங்கள் செல்ஃபிக்கள் எடுத்து மகிழும்படியும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரி வருகின்றனர்.
This Statue Was Placed On Chennai#RohiniCinemas Complex....At Last Night...
— TIRUNELVELI AJITHKUMAR FAN'S CLUB (@TIRUNELVELIAFC) January 16, 2023
Today Morning We R Ready To Shift Chennai Ambattur #RakkiCinemas
So You Guy's Go & Take Snap With Our Chief #AjithKumar
Get Ready NELLAI Ajithiyan's😎
விரைவில் நெல்லையில் உங்களுக்காக#ThunivuPongal pic.twitter.com/bFMu7FL9Wk
நேற்று முதல் பொங்கல் விடுமுறைகள் தொடங்கியுள்ள நிலையில் துணிவு பட பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் இன்னும் பன்மடங்கு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





















