17 years of Varalaru : 17 ஆண்டுகளை கடந்த 'வரலாறு' படத்தின் வரலாறு தெரியுமா? பெரிய மனசுக்காரர்பா அஜித்...
17 years of Varalaru : நான் நடிக்கும் அடுத்த படத்திற்கு யார் கால்ஷீட் பெறுகிறார்களோ அவர்களிடத்தில் இருந்து அட்வான்ஸ் தொகையை பெற்று தருகிறேன். அதை வைத்து படத்தை ரீலீஸ் செய்யுங்கள் - அஜித்

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் 2006ம் ஆண்டு வெளியான வரலாறு திரைப்படம், அஜித் திரை பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
டைட்டில் மாற காரணம் :
அஜித் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்க அவருக்கு ஜோடியாக அசின் மற்றும் கனிகா கதாநாயகியாக நடித்திருந்தனர். மேலும் ரமேஷ் கண்ணா, சுஜாதா, சுமன் ஷெட்டி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த இப்படத்திற்கு முதலில் 'காட்பாதர்' என பெயரிப்பட்டது. பின்னர் படத்தின் டைட்டில் தமிழில் இருந்தால் மட்டுமே கேளிக்கை வரி விலக்கு வழங்கப்படும் என தமிழக அரசின் உத்தரவால் படத்தின் டைட்டில் 'வரலாறு' என மாற்றப்பட்டது. தீபாவளி ரிலீஸாக வெளியான இப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்து வசூலிலும் சாதனை படைத்தது.
ஏ.ஆர். ரஹ்மான் - கே.எஸ். ரவிக்குமார் கூட்டணி:
படையப்பா, முத்து, தெனாலி படங்களுக்கு பிறகு நான்காவது முறையாக ஏ.ஆர். ரஹ்மான் - கே.எஸ். ரவிக்குமார் கூட்டணி சேர்ந்த இப்படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள் இருந்தன. அதே போல அஜித்துடன் பவித்ரா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இணைந்தார் ஏ.ஆர்.ஆர்.
வித்தியாசமான கதாபாத்திரத்தில் அஜித் :
பலர் பேரிடம் இப்படத்தின் ஸ்கிரிப்ட் சொல்லப்பட்டபோது அனைவரும் இதன் கதாபாத்திரம் சற்று பெண்மை கலந்து இருக்கும் கதாபாத்திரமாக இருப்பதால் மறுத்துள்ளனர். அந்த சமயத்தில் அஜித் 'மிரட்டல்' படத்தில் கமிட்டாகி இருந்தார். பின்னர் அதில் இருந்து அவர் விலகியதால் அஜித் வரலாறு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதலில் அஜித் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டாலும் பின்னர் நடனக் கலைஞராக ஏற்றுக்கொண்டனர். இப்படத்தில் அவரின் அபாரமான தத்ரூபமான நடிப்பு பாராட்டுகளை பெற்றது.
ஹீரோயின் தேர்வு :
வரலாறு படத்தில் அஜித் மனைவியாக நடிக்க தேவயானி, சிம்ரன், மீனா என பலரை அணுகினார்கள் என கூறப்பட்டாலும் கடைசியாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வானது நடிகை கனிகா. மகன் அஜித் கேரக்டருக்கு அசின் ஜோடியானார்.
வெளியாவதில் சிக்கல் :
வரலாறு திரைப்படத்தை வெளியிடுவதில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டதால் படத்தை வெளியிட கால தாமதம் ஏற்பட்டது. இப்படத்தை வெளியிட அஜித் மிகவும் பாடுபட்டார். நிச்சயமாக இப்படம் அவரது கேரியரில் மிக முக்கியமான படமாக அமையும். வெளியானதும் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் ஈட்ட போகிறது என நம்பினார். அதனால் நான் நடிக்கும் அடுத்த படத்திற்கு யார் கால்ஷீட் பெறுகிறார்களோ அவர்களிடத்தில் இருந்து அட்வான்ஸ் தொகையை பெற்று தருகிறேன். அதை வைத்து படத்தை ரீலீஸ் செய்யுங்கள் என கூறியுள்ளார்.
அப்படி ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ் காதுகளுக்கு இந்த தகவல் போக அவர் வரலாறு படத்தின் ரிலீசுக்கு தேவையான பணத்தை கொடுத்து உதவி இருக்கிறார். அப்படி ஆனந்தா பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 'பில்லா' என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி பல வரலாற்றை கொண்ட ஒரு படம் தான் 17 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 'வரலாறு' திரைப்படம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

