Aishwarya Meets Ilayaraja: இசை நிரம்பிய திங்கள்... இளையராஜாவுடன் ஐஸ்வர்யா ரஜினி சந்திப்பு.. மகிழ்ச்சி பதிவு!
ரஜினியின் மகளான ஐஸ்வர்யா இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இளைராஜாவை சந்தித்த ரஜினியின் மகள் ஐஸ்வர்யா, அது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
View this post on Instagram
இது தொடர்பான பதிவில், “ என்னுடைய திங்கள் கிழமையின் நண்பகல் இவ்வளவு இசை நிரம்பியதாகவும், மாயாஜாலம் நிரம்பியதாகவும் இருந்ததில்லை. இளையராஜா மாமாவுடன் நேரத்தை செலவழிப்பது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்க கூடிய ஒன்று” என்று அவர் பதிவிட்டு இருக்கிறார
திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது மகள் ஐஸ்வர்யா. சமீபத்தில் இவருக்கும் தனுஷிற்கும் இடையே நடந்த விவாகரத்து கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து பேசிய தனுஷின் அப்பாவான கஸ்தூரிராஜா, சாதரண குடும்ப சண்டைதான் என்று விளக்கமளித்தார். ஆனால் தனுஷூம் சரி, ஐஸ்வர்யாவும் சரி இந்த விவகாரத்தில் முடங்கிவிடவில்லை.
தத்தமது வழிகளில் தங்களது பயணத்தை தொடர்ந்தனர். தனுஷ் வாத்தி படத்தில் பிசியாக, ஐஸ்வர்யா முசாபிர் பாடல் வேலைகளை கவனிக்க சென்றுவிட்டார். அண்மையில் அந்த பாடல் வெளியாகியிருந்த நிலையில், அதனை கணவர் தனுஷ் நண்பர் ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கிடையே ஐஸ்வர்யா சிம்புவுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஐஸ்வர்யா ராகவா லாரன்ஸை சந்தித்து பேசினார். அதனைத்தொடர்ந்து தான் முதன்முறையாக இந்தியில் இயக்கும் ‘ஓ சாத்தி ஜால்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
View this post on Instagram