மேலும் அறிய

AGS Cinemas: பாப்கார்ன் விற்று படத்தை ஓட்டிய அர்ச்சனா கல்பாத்தி.. ஏஜிஎஸ் சினிமாவுக்கு இப்படி ஒரு நிலையா?

வீட்டில் யாருக்குமே தியேட்டர் பிசினஸ் தெரியாது. அதனால் நான் படம் பார்த்து எத்தனை காட்சிகள் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்தேன். என்னுடைய முயற்சியால் ஏஜிஎஸ் சினிமா வளர்ந்தது என அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சினிமாவில் அறிமுகமான காலக்கட்டத்தை அதன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நினைவுக் கூர்ந்துள்ளார். 

ஒரு நேர்காணலில் பேசிய அவர், “நாங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் குடும்பத்துடன் சேர்ந்து படம் பார்ப்போம். பல மொழி படங்களும் அதில் இருக்கும். அதனால் தியேட்டர் கட்டலாம் என வீட்டில் ஐடியா சொன்னார்கள். அதற்கான பணியை நான் வில்லிவாக்கத்தில் மேற்கொண்டிருந்தேன். அதேசமயம் தான் அப்பா கல்பாத்தி அகோரம் திருட்டுப்பயலே படத்தை முதன்முதலாக தயாரித்தார். அதனைத் தொடர்ந்து சந்தோஷ் சுப்பிரமணியம் உருவானது. அப்போது மினிமம் கேரண்டி அடிப்படையில் தான் படம் தருவார்கள். நாங்கள் போய் கேட்டால் உங்களை நம்பி எப்படி படம் தர முடியும் என கேட்டார்கள்.

இதனால் ஷாரூக்கான் நடித்த ரா ஒன் படத்தை மினிமம் கேரண்டி அடிப்படையில் ரூ.25 லட்சம் கொடுத்து வாங்கினேன். அந்த படம் நாங்கள் எதிர்பார்த்த மாதிரி செல்லவில்லை. வில்லிவாக்கத்தில் உள்ள ஏஜிஎஸ் சினிமாவில் 5 ஸ்கிரீனில் படம் ஓடியது. பாப்கார்ன் விற்று தான் செலவழித்த பணத்தை ஓரளவு பெற்று சமாளிக்க முடிந்தது. அந்த நேரத்தில் தான் களவாணி படம் வெளியாகியிருந்தது. பலரும் வந்து அந்த படத்துக்காக டிக்கெட் கேட்டார்கள். அதன்பிறகே நான் ஒவ்வொரு படத்தையும் பார்த்து எந்த படத்துக்கு எத்தனை காட்சிகள் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்தேன். வீட்டில் யாருக்குமே தியேட்டர் பிசினஸ் தெரியாது. என்னுடைய முயற்சி தான் அது. 

நான் அந்த சமயத்தில் ஒவ்வொரு படமும் செய்யும் வசூல் தொடங்கி அனைத்து தரவுகளையும் பதிவு செய்வேன். அப்படியாக அப்பா பட விநியோகஸ்தராக களமிறங்கும்போது அந்த தரவுகளை பயன்படுத்திக் கொண்டார். என் ஒரு தியேட்டரில் இவ்வளவு கலெக்‌ஷன் வருகிறது என்றால் தமிழ்நாடு முழுவதும் வசூல் எப்படி வருகிறது என்பதை கணக்கிடுவேன். அவர்களை எங்களுடைய போட்டியாளர் என்று நினைப்பேன். இதில் சத்யம் தியேட்டர் கலெக்‌ஷனை அடித்துக் கொள்ளவே முடியாது. அதற்கு காரணம் அவர்கள் ஒரு படத்தை ஒரு வாரமானாலும் மாற்ற மாட்டார்கள். ஆனால் நான் எல்லா படத்தையும் முதல் நாள் பார்த்து விட்டு அதற்கேற்ப காட்சிகளை மாற்றி விடுவேன். 

Also Read: Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!

அதாவது எது பெரிய ஸ்கிரீன், சின்ன ஸ்கிரீனில் என்பதை நான் முடிவு செய்வேன். கிட்டதட்ட 10 ஆண்டுகள் நான் அதைத்தான் செய்து வந்தேன். இதில் எனக்கும் அப்பாவுக்கும் நிறைய சண்டை வருவோம். அவர் நிறைய படம் ஆசையோடு எடுப்பார். ஆனால் தியேட்டரில் பல காரணங்களால் படத்தை எங்கள் படமாக இருந்தாலும் தூக்கி விடுவதை விமர்சிப்பார். இதன்பின்னர் என்னை பட விநியோகஸ்தராக கொண்டு வந்தார். ஆனால் நான் எக்காரணம் தயாரிப்பாளராக வரமாட்டேன் என சொல்லி வந்த நிலையில் பிகில் படம் மூலம் அதுவும் நடந்தது” என அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget