மேலும் அறிய

Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!

விஜய் வெற்றி பெற்றது மிகப்பெரிய ஆச்சரியம் தான். மக்கள் அவருக்கு ஆதரவளித்ததை எதிர்பார்க்கவில்லை. தேர்தல் முடிவு வெளியான நாளில் நான் டிவி பார்க்கும்போது அது எனக்கு கனவாக தான் தெரிந்தது என போஸ் வெங்கட் கூறியுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் வெற்றி பெற்றது மிகப்பெரிய ஆச்சரியம் தான் என நடிகரும், திமுக பிரமுகருமான போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார். 

நேர்காணல் ஒன்றில் பேசிய அவரிடம், விஜய் மீது அதிகமான விமர்சனங்களை நீங்கள் வைத்து விட்டீர்களோ? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “விஜய் மேல் அதீதமான விமர்சனம் வைக்கவில்லை. சரியான விஷயங்களை தான் வைத்தேன். நான் பேசியதை வைத்து விஜய் நிறைய விஷயம் மாற்றிக் கொண்டார். அது எனக்கே தெரியும். விஜயைப் பற்றி பேசவே அதிமுக, திமுகவில் பயந்தார்கள். ஆனால் மொத்த சினிமாக்காரர்களும் விஜயை தான் விரும்பினார்கள். அது எனக்கு தெரிந்தது. அதில் நான் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தேன். அதோட பாதிப்புகள் இன்று வரை உள்ளது. அதை நான் அனுபவித்து தான் வருகிறேன். 

விஜய் எனக்கு நல்ல நண்பர் தான். மிகவும் அமைதியானவர். நல்ல நினைவுத்திறன் கொண்டவர். நடிப்பில் மிகுந்த அர்ப்பணிப்பு கொண்டவர். விஜயின் தயாரிப்பில் நான் படம் நடித்துள்ளேன். என்னுடன் சேர்ந்து நடிக்கவும் விருப்பப்பட்டார். அவர் அரசியலுக்கு வரப்போகிறேன் என சொன்னதும் அவரை கொள்கை ரீதியாக தயார் செய்ய முயற்சிகள் மேற்கொண்டேன். அது நடக்கவில்லை. அதன்பிறகு தவெகவில் என்னை இணையச்சொல்லி தவெகவின் முக்கிய நபர் என்னை அணுகினார். விஜய் விருப்பப்படுவதாகவும் சொன்னார். 

விஜய் வெற்றி பெற்றது மிகப்பெரிய ஆச்சரியம் தான். மக்கள் அவருக்கு ஆதரவளித்ததை எதிர்பார்க்கவில்லை. தேர்தல் முடிவு வெளியான நாளில் நான் டிவி பார்க்கும்போது அது எனக்கு கனவாக தான் தெரிந்தது. அதை நீங்கள் நம்புவீர்களா என தெரியவில்லை. என் பொண்டாட்டி தலையில் தட்டி, உங்களுக்கு அறிவே இல்லை. என்ன சொன்னீங்கன்னு என கேட்டார். அதேபோல் என் மகன், ‘டாடி.. உங்களுக்கு சுத்தமாக அரசியல் அறிவில்லை’ என கூறிவிட்டான். என்னுடைய மகள் மிகப்பெரிய விஜய் ரசிகை. அவள் என்னிடம், நான் தான் அன்னிக்கே சொன்னேனே, எனக்கு 18 வயது ஆகியிருந்தால் நானும் விஜய்க்கு ஓட்டு போட்டிருப்பேன் என சொன்னாள். அதைக் கேட்டு எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

Also Read: Vijay vs Seeman: ஒரு படம் கூட உருப்படி இல்லை என விமர்சனம்.. சீமானுக்கு பிடித்த விஜய் படங்கள் என்னென்ன தெரியுமா?

இவர்களே இந்த ஏறுஏறு ஏறுகிறார்கள் என்றால் மொத்த தமிழ்நாடும் என்ன செய்யுமோ என தோன்றியது. வச்சு செய் செய்யுன்னு செஞ்சிட்டாங்க. இதை முழுவதுமாக ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். சினிமாத்துறையில் இருந்து ஒருவர் முதலமைச்சரானது சந்தோசமாக இருக்கிறது. 

அதேசமயம் விஜய் என்ன தவறு செய்தாலும் அதை எதிர்த்து பேச முதல் ஆளாக நான் வருவேன். அங்கு நான் பின்வாங்க மாட்டேன். விஜய் செய்வதை பார்த்து ரசிக்கிறேன். ஒட்டுமொத்த மக்களும் திமுக, அதிமுக செய்ய வேண்டியதை ஒன்னொருவர் செய்தால் ஆதரவு கொடுப்பார்கள். அதுபோல தான் எனக்கும் விஜய்க்குமான உறவு என போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!
CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Embed widget