மேலும் அறிய

நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!

ஊக்கத்தொகையை உயர்த்தி விட்டோம் என்று கணக்கு காட்டி பெருமிதம் பேசுவதற்காக மட்டும்தான் தமிழக அரசின் இந்த அறிவிப்பு பயன்படும்- அன்புமணி.

நெல் ஊக்கத்தொகை போதாது, நடப்பாண்டில் ரூ.3000, அடுத்த ஆண்டில் ரூ.3500 வீதம் கொள்முதல் விலை வழங்க வேண்டும்! என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாட்டில் நடப்பாண்டில் அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் ஊக்கத்தொகை சன்ன ரக நெல்லுக்கு ரூ.289, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.159 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல், கடந்த ஆண்டில்  கரும்புக்கான ஊக்கத்தொகை ரூ.709.50 ஆக உயர்த்தப்பட்டு டன்னுக்கு ரூ.4000 ஆக வழங்கப்படும் என்று தவெக அரசு அறிவித்திருக்கிறது. உண்மையில் சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை ரூ.28 மட்டும் தான் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது போதுமானதல்ல.

இது  போதுமானதல்ல

நெல்லுக்கான ஊக்கத்தொகையை தமிழ்நாடு அரசு பெரிய அளவில் உயர்த்தவில்லை. நடப்பாண்டில் சாதாரண வகை நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,441, சன்ன வகை நெல்லுக்கு ரூ.2,461 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அத்துடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையாக சன்னரக நெல்லுக்கு ரூ.156, சாதாரண ரக நெல்லுக்கு  131 வீதம் கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. இப்போது தவெக அரசு சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை குவிண்டாலுக்கு ரூ.28, சன்னரக நெல்லுக்கு ரூ.133 உயர்த்தியிருக்கிறது. இதன் காரணமாக நெல்லுக்கான கொள்முதல் விலை சன்னரக நெல்லுக்கு ரூ.2750, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.2600 ஆக உயர்ந்திருக்கிறது. இது  போதுமானதல்ல.

சாதாரண நெல்லுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்தியுள்ளது. ஆனால், தமிழக அரசு அதன் ஊக்கத்தொகையை, மத்திய அரசால் உயர்த்தப்பட்டதை விட பாதிக்கும் குறைவாகவே உயர்த்தியுள்ளது. சன்னரக நெல்லுக்கான ஊக்கத்தொகை ரூ.289 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல் வகைகளில் 95 விழுக்காட்டுக்கும் கூடுதலான நெல்  சாதாரண ரகங்களைச் சேர்ந்தவை ஆகும். அதனால் சாதாரண ரக நெல்லுக்கான கொள்முதல் விலை தான் கூடுதலாக உயர்த்தப்பட வேண்டும்.

அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை வெறும் ரூ.28 மட்டும்  உயர்த்தி விட்டு, மிகக் குறைந்த அளவில் கொள்முதல் செய்யப்படும் சன்னரக நெல்லுக்கான  ஊக்கத்தொகையை ரூ.133 உயர்த்துவதால் யாருக்கும் பயனில்லை. ஊக்கத்தொகையை உயர்த்தி விட்டோம் என்று கணக்கு காட்டி பெருமிதம் பேசுவதற்காக மட்டும்தான் தமிழக அரசின் இந்த அறிவிப்பு பயன்படும்.

ஒடிசாவில் கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் நெல்லுக்கு  ரூ.800  வீதமும், கேரளத்தில் ரூ.650 வீதமும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நடப்பாண்டில் அந்த மாநிலங்களில்  ஊக்கத்தொகை இன்னும் கூடுதலாக உயர்த்தப்படலாம். அவற்றுடன் ஒப்பிடும் போது தமிழக அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை போதுமானதல்ல.

தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.2300 முதல் ரூ.2400 வரை செலவாகிறது. அத்துடன் கூடுதலாக ரூ.200 மட்டும் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிப்பது எந்த வகையிலும் நியாயம் அல்ல. எனவே, நடப்பாண்டில் சாதாரண வகை நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3000 கிடைக்கும் வகையில்  ஊக்கத் தொகையை ரூ.559 ஆக உயர்த்த வேண்டும். அதேபோல், அடுத்த ஆண்டில் தவெகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு நெல்லுக்கான கொள்முதல் விலையை ரூ.3500 ஆக உயர்த்த வேண்டும்.

முழு மகிழ்ச்சி இல்லை

கரும்புக்கான கொள்முதல் விலையை பொறுத்தவரை 2025 &- 26 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து  வழங்கப்பட்ட கரும்புக்கு மத்திய அரசால்   டன் ஒன்றுக்கு ரூ. 3290.50  கொள்முதல் விலை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அரசின் சார்பில் ஊக்கத்தொகை எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு முன் 2024&-25ஆம் ஆண்டில் கரும்புக்கு வழங்கப்பட்ட  ஊக்கத் தொகையான ரூ.349 -யுடன்  கூடுதலாக ரூ.360.50  சேர்த்து ரூ.709.50 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டில் கரும்புக்கு டன்னுக்கு ரூ.4000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த ஊக்கத் தொகை அறிவிப்பு விவசாயிகளுக்கு முழுமையான மகிழ்ச்சியை அளிக்காது என்றாலும், மனநிறைவு அளிக்கும்.

2026-&27 ஆம் ஆண்டுக்கான  அரவைப் பருவம் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. வரும் பருவத்தில் கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு மத்திய அரசின் கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ..3383 அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கடந்த ஆண்டுக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்கத் தொகையை சேர்த்தால் டன்னுக்கு ரூ.4092 கிடைக்கும். கடந்த ஆண்டுக்கான ஊக்கத்தொகையுடன் நடப்பாண்டில் ரூ.408 உயர்த்தி வழங்கினால் கரும்புக்கு கொள்முதல் விலையாக ரூ.4500 கிடைக்கும். எனவே வரும் அரவைப் பருவத்தில் கரும்புக்கான கொள்முதல் விலையுடன் மாநில அரசின் ஊக்கத் தொகையாக ரூ. 1117  சேர்த்து வழங்க வேண்டும். அதற்கான அறிவிப்பை இப்போதே வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்’’ என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget