மேலும் அறிய

Adipurush: 'ஹனுமன் கடவுளே இல்லை’ .. ‘ஆதிபுருஷ்’ வசனகர்த்தா கருத்தால் சர்ச்சை.. இணையத்தில் கடும் எதிர்ப்பு

ஆதிபுருஷ் படத்தின் வசனங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அதனை எழுதிய மனோஜ் முன்டாஷிர் சுக்லா மீண்டும் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்துள்ளார். 

ஆதிபுருஷ் படத்தின் வசனங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அதனை எழுதிய மனோஜ் முன்டாஷிர் சுக்லா மீண்டும் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்துள்ளார். 

வால்மீகி எழுதிய ராமாயணத்தின் ஒரு பகுதியை அடிப்படையாக கொண்டு கடந்த ஜூன் 16 ஆம் தேதி 3டி தொழில் நுட்பத்தில் வெளியான படம் ‘ஆதிபுருஷ்’. ஒரே நேரத்தில் இந்தி,தெலுங்கு,  தமிழ், கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியான இப்படத்தில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன், லட்சுமணனாக சன்னி சிங், ஹனுமனாக தேவ்தட்டா நாக் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான ஆதிபுருஷ் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. 

முன்னதாக படத்தின் டீசர், ட்ரெய்லரின் போது கிராபிக்ஸ் காட்சிகள் கிண்டல் செய்யப்பட்டது. வீடியோ கேமில் வருவதை விட மோசமாக இருப்பதாக சொல்லப்பட்டதால் படக்குழு போட்ட பட்ஜெட்டை விட கூடுதலாக கிராபிக்ஸ் காட்சிகளை மேம்படுத்த ரூ.100 கோடி செலவிட்டது. ஆனாலும் படம் ரசிகர்களை கவரவில்லை. முதல் 3 நாட்கள் மக்கள் தியேட்டருக்கு சென்று ஆதிபுருஷ் படத்தை பார்த்தாலும், வெளியே வரும் போது எதிர்மறையான விமர்சனங்களையே முன்வைத்தனர். 

அதேசமயம் படத்தில் இடம் பெற்ற வசனங்கள்  சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து வசனங்களை மாற்ற படக்குழு முடிவெடுத்தது.  சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து கொலை மிரட்டல்களும் வந்ததால் ஆதிபுருஷ் படத்திற்கு வசனம் எழுதிய மனோஜ் முன்டாஷிர் சுக்லா வீட்டுக்கு மும்பை காவல்துறை பாதுகாப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

இப்படியான நிலையில் மனோஜ் முன்டாஷிர் சுக்லா மீண்டும் சர்ச்சையான கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் ஒரு பேட்டியில், ‘ஹனுமான் கடவுள் அல்ல, அவர் ஒரு பக்தர் மட்டுமே. அவர் ராமரைப் போல  தத்துவ ரீதியாகப் பேசியதில்லை. மேலும் ராமர் மேல் இருந்த பக்திக்கும், அதன் சக்திக்கும் தான் ஹனுமனை நாம் கடவுளாக ஆக்கியுள்ளோம்’ என தெரிவித்துள்ளார். இது பலரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே ஆதிபுருஷ் படத்தின் மீது நெகட்டிவ் விமர்சனங்கள் பரவி வரும் நிலையில், மனோஜின் இந்த கருத்து இணையத்தில் கடும் எதிர்ப்புகளைப் பெற்றுள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
" இதில் என்ன தவறு இருக்கிறது ?"கணவர் விஜய் தேவரகொண்டா குறித்த சர்ச்சைக்கு ராஷ்மிகா மந்தனா விளக்கம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
Embed widget