Vanitha Vijayakumar: என் வாழ்க்கையில் பெண்களை நம்பவே மாட்டேன் - வனிதா விஜயகுமார் பரபரப்பு பேச்சு
இன்னைக்கு இருக்கும் நிலைமையில் படங்கள் தியேட்டரில் வெளியாவதே மிகப்பெரிய வெற்றியாக நான் பார்க்கிறேன். அந்த வகையில் என்னுடைய படங்கள் தியேட்டர் வருவது மிகப்பெரிய பாக்கியம் தான்.
நான் என் வாழ்க்கையில் பெண்களை நம்பவே மாட்டேன் என நடிகை வனிதா விஜயகுமார் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
கன்னடத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு பூஜா காந்தி, பிரியங்கா கோத்தாரி மற்றும் ரகு முகர்ஜி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் “தண்டு பால்யா”. ஸ்ரீனிவாஸ் ராஜூ இயக்கிய இந்த படம் கொடூரமாக கொலை செய்யும் கொலை கும்பலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படம் தற்போது தமிழில் “தண்டுபாளையம்” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. டைகர் வெங்கட் இயக்கியுள்ள இந்த படத்தில் சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இவர்களுடன் முமைத் கான், சூப்பர் குட் சுப்பிரமணியம், பிர்லா போஸ், ஆலியா, ரவி ஷங்கர், ரவிகாலே என பலரும் நடித்துள்ளனர். ஜித்தின் ரோஷன் இசையமைத்துள்ள இப்படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டிரைலர் மற்றும் போஸ்டர்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கியது. வெங்கட் மூவிஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
தண்டுபாளையம் படம் என்னுடைய மற்றுமொரு படம் என்று தான் நான் நினைத்தேன். ஆனால் டப்பிங் மட்டுமே பார்த்துள்ளேன். படம் பார்த்த பலரும் நன்றாக இருக்கிறது என சொல்லியிருக்கிறார்கள். இன்னைக்கு இருக்கும் நிலைமையில் படங்கள் தியேட்டரில் வெளியாவதே மிகப்பெரிய வெற்றியாக நான் பார்க்கிறேன். அந்த வகையில் என்னுடைய படங்கள் தியேட்டருக்கு போய் ஓடிடியில் வெளியாவதை பெரிய பாக்கியமாக தான் நினைக்கிறேன். நான் ஊடகத்துறையினர் மேல் கோபமாக இருக்கிறேன்.
ஏனென்றால் படங்கள், சர்ச்சை தொடர்பான விஷயங்கள் பற்றி செய்தி வெளியிடுகிறீர்கள். திரைத்துறையில் ஊடகத்துறையினருக்கும் ஒரு பங்கு இருக்கிறது. நாம் தனிப்பட்ட முறையில் பேசுவது என்பது வேறு. ஆனால் மற்றவர்களை பற்றி பேசுவது என்பது தவறு. அவர்களுக்கு ஊடகம் முக்கியத்துவம் கொடுக்கிறது. இதனால் வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் தமிழ் சினிமாவை பற்றி தவறாக நினைக்கிறார்கள் என சுசித்ரா- பயில்வான் ரங்கநாதன் விஷயத்தை மறைமுகமாக குறிப்பிட்டு கருத்து தெரிவித்தார்.
பெண்களை பற்றி சினிமாவில் காட்டும்போது, இப்படியும், ஒரு சிலர் இருக்கிறார்கள் என்பதை தான் காட்டுகிறோம் தவிர, எல்லாரும் இப்படி இருக்கிறார்கள் என காட்டுவதில்லை. நான் என் வாழ்க்கையில் பெண்களை நம்பவே மாட்டேன். எனக்கு ஆண் நண்பர்கள் தான் அதிகம். பெண்களுக்கு குறைவான வாய்ப்புகள் தருகிறார்கள்.