Trisha: ’என்னோட அக்கவுண்ட் ஹேக் ஆகிடுச்சு..’ - நடிகை த்ரிஷா தகவல்!
Trisha Twitter Account Hacked: நடிகை த்ரிஷாவின் சமூக வலைதளப்பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகை த்ரிஷாவின் எக்ஸ்தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த திரிஷா 1999 ஆம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் ஒரு காட்சியில் நடித்து திரையுலகில் எண்ட்ரீ கொடுத்தார். அதன்பிறகு 2002 ஆம் ஆண்டு லேசா லேசா, மௌனம் பேசியதே ஆகிய படங்கள் வெளியாகி அவருக்கு ரசிகர்களிடையே நல்ல அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து ரஜினி,கமல், விஜய், அஜித், விக்ரம்,சூர்யா, கார்த்தி, சிலம்பரசன், ஜெயம் ரவி, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் முன்னணி அத்தனை ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
கடந்த 2 தசாப்தங்களில் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, கார்த்தி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நடிகையாவார். சந்தியா (மௌனம் பேசியதே), தனலட்சுமி (கில்லி), கவிதா (உனக்கும் எனக்கும்), அபி (அபியும் நானும்), ஜெஸ்ஸி (விண்ணைத்தாடி வருவாயா),ஹேமானிகா (என்னை அறிந்தால்), ருத்ரா (கொடி), ஜானு (96), குந்தவை (பொன்னியின் செல்வன், தையல் நாயகி (ராங்கி) ஆகிய பெயர்கள் திரிஷாவின் மிகச்சிறந்த கேரக்டர்கள். 2000க்குப் பிறகு தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹீரோயின்களில் தொடர்ந்து 22 ஆண்டுகளாக நடித்து வருகிறார்.
விடாமுயற்சி த்ரிஷா:
விடாமுயற்சி படத்தில் அஜித் உடன் த்ரிஷா நடித்துள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. த்ரிஷா ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். விடாமுயற்சி இரண்டாவது நாளின் முடிவில் இந்தியாவில் மொத்தமாக சுமார் ரூ.32.12 கோடி நிகர வசூல் செய்துள்ளது. அதன்படி, முதல் நாள் வசூலை காட்டிலும், விடாமுயற்சி திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. முதல் நாளில் இந்த திரைப்படம், தமிழில் 25.5 கோடி ரூபாய், தெலுங்கில் 0.5 கோடி ரூபாய் என மொத்தம் 26 கோடி ரூபாயை வசூல் செய்தது. அஜித் - த்ரிஷா நடிப்பில் வெளியாகும் படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கிறது.
எக்ஸ் தள கணக்கு ஹேக்:
த்ரிஷாவின் எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவருடைய எக்ஸ் பக்கத்தில் ”முதல் முறையாக இதுபோன்ற ஒன்றைச் செய்வது உற்சாகமளிக்கிறது. நான் எனது சொந்த கிரிப்டோகரன்சியை உருவாக்கி உள்ளேன். இப்போது அது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. லவ் யூ ஆல்..." என குறிப்பிட்டிருந்தார். அதன் லிங்கையும் இணைந்திருந்தார்.
த்ரிஷா தனதுஇன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “என்னுடைய எக்ஸ் தள அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதை சரிசெய்யும்வரை அதில் வரும் பதிவுகளை நான் போஸ்ட் செய்பவை அல்ல” என குறிப்பிட்டுள்ளார்.
த்ரிஷாவின், அதற்கடுத்த படங்களாக அஜித்குமாரின் குட் பேட் அக்லி, கமலின் தக் லைஃப், சூர்யா 45 முதலிய திரைப்படங்களில் திரிஷா நடித்துவருகிறார். அஜித் குமார் - த்ரிஷா இருவர் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகிறது.
ஹ்


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

