மேலும் அறிய

Watch Video: குந்தவையாக மாறிய த்ரிஷாவின் பயணம்... வைரலான வீடியோ!

பொன்னியின் செல்வன் கதையின் வலிமையான பெண் கதாபாத்திரங்களில் ஒன்றான குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார் என்றபோது கலவையான விமர்சனங்கள் எழுந்தன.

பொன்னியின் செல்வன் படத்தில் தான் நடித்த குந்தவை கதாபாத்திரத்துக்கு தயாரானது மற்றும் டெஸ்ட் ஷூட் குறித்து த்ரிஷா பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் 30ஆம் தேதி கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு வெளியாகி உலகம் முழுவதுமுள்ள தமிழ் ரசிகர்களைக் கவர்ந்து ஹிட் அடித்த படம் ’பொன்னியின் செல்வன்’. 

கோலிவுட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொன்னியின் செல்வன் கதையை படமாக்க முயன்ற பலரும் தங்கள் முயற்சியில் தோல்வியடைந்த நிலையில், மணிரத்னம் தன் நீண்ட நாள் கனவை சென்ற ஆண்டு ஒட்டுமொத்த திரையுலகமும் கொண்டாட நனவாக்கினார்.

தமிழ்,தெலுங்கு,இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்தப் படம் பிரம்மாண்ட வெற்றி பெற்று 450 கோடி ரூபாய் வரை வசூலை ஈட்டியது.

கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி,  ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி என மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே திரையை ஆக்கிரமித்த நிலையில், ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்காக பெரும் உழைப்பைப் போட்டு அந்தந்த பாத்திரங்களாக உருவெடுத்து பாராட்டுகளைப் பெற்றனர்.

அந்த வகையில் நடிகை த்ரிஷா முதன்முறையாக ஒரு வரலாற்றுக் கதையில், அதுவும் இளவரசி குந்தவை பாத்திரத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி லைக்ஸ் அள்ளினார்.

பொன்னியின் செல்வன் கதையின் வலிமையான பெண் கதாபாத்திரங்களில் ஒன்றான குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார் என்றபோது கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், இவற்றுக்கு தன் நடிப்பால் பதிலடி கொடுத்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார் த்ரிஷா.

இந்நிலையில், குந்தவை பாத்திரமாக தான் உருவெடுத்தது பற்றி த்ரிஷா பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது. குந்தவை கதாபாத்திரத்துக்காக எடுக்கப்பட்ட டெஸ்ட் ஷூட் புகைப்படத்தையும் த்ரிஷா இதனுடன் பகிர்ந்துள்ளார்.

மேலும் குந்தவை பாத்திரத்துக்கான ஆடை, அலங்கார வடிவமைப்பு, ஓவியர் மணியத்தின் குந்தவை ஓவியத்தைத் தழுவி இந்தக் கதாபாத்திரம் உயிர்பெற்ற விதம் ஆகியவை இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், த்ரிஷாவின் இந்தப் பதிவுகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

வரும் ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 வெளியாகும் நிலையில், வரும் ஏப்ரல் 5ஆம் தேதி இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: Archana Gautam: பிக்பாஸ் பிரபலத்திற்கு கொலை மிரட்டல்... சிக்கும் பிரியங்கா காந்தியின் உதவியாளர்...பாலிவுட்டில் பரபரப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் உடன் துப்பாக்கிச் சண்டை - ராணுவ வீரர்கள் 4 பேர் வீரமரணம்
Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் உடன் துப்பாக்கிச் சண்டை - ராணுவ வீரர்கள் 4 பேர் வீரமரணம்
Madurai NTK Murder: மதுரையில், வாக்கிங் சென்றுகொண்டிருந்த, நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை
Madurai NTK Murder: மதுரையில், வாக்கிங் சென்றுகொண்டிருந்த, நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை
Breaking News LIVE, JULY 16: சென்னையில் 1 சவரன் ஆபரணத் தங்கம் ₹54,640க்கு விற்பனை
Breaking News LIVE, JULY 16: சென்னையில் 1 சவரன் ஆபரணத் தங்கம் ₹54,640க்கு விற்பனை
CM Stalin: காவிரி விவகாரம் - இன்று கூடுகிறது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - எடுக்கப்போகும் முடிவு என்ன?
CM Stalin: காவிரி விவகாரம் - இன்று கூடுகிறது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - எடுக்கப்போகும் முடிவு என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rowdy Arrest | கட்டிலுக்கு அடியே பதுங்கு குழி..பயங்கர ஆயுதங்களுடன் ரௌடிகள்! தட்டித்தூக்கிய போலீஸ்Rahul Gandhi Ambani : ”SORRY மிஸ்டர் அம்பானி” அழைப்பை ஏற்காத ராகுல்! காலர் தூக்கும் காங்கிரஸ்Savukku Shankar :  ”தேச விரோதியா சவுக்கு?” அரசுக்கு சரமாரி கேள்வி! நீதிமன்றம் அதிரடிRajinikanth : என்கவுன்டர் குறித்த கேள்வி..ESCAPE ஆன ரஜினி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் உடன் துப்பாக்கிச் சண்டை - ராணுவ வீரர்கள் 4 பேர் வீரமரணம்
Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் உடன் துப்பாக்கிச் சண்டை - ராணுவ வீரர்கள் 4 பேர் வீரமரணம்
Madurai NTK Murder: மதுரையில், வாக்கிங் சென்றுகொண்டிருந்த, நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை
Madurai NTK Murder: மதுரையில், வாக்கிங் சென்றுகொண்டிருந்த, நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை
Breaking News LIVE, JULY 16: சென்னையில் 1 சவரன் ஆபரணத் தங்கம் ₹54,640க்கு விற்பனை
Breaking News LIVE, JULY 16: சென்னையில் 1 சவரன் ஆபரணத் தங்கம் ₹54,640க்கு விற்பனை
CM Stalin: காவிரி விவகாரம் - இன்று கூடுகிறது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - எடுக்கப்போகும் முடிவு என்ன?
CM Stalin: காவிரி விவகாரம் - இன்று கூடுகிறது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - எடுக்கப்போகும் முடிவு என்ன?
Nilgiri: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Nilgiri: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Donald Trump: இனிதான் ஆட்டமே..! அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் - வெளியான முதல் அறிவிப்பு
இனிதான் ஆட்டமே..! அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் - வெளியான முதல் அறிவிப்பு
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
Rasipalan: தனுசுக்கு வரவு, மகரத்துக்கு முயற்சி -  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: தனுசுக்கு வரவு, மகரத்துக்கு முயற்சி - உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Embed widget