Trisha: என் மகன் இறந்துவிட்டான்... நடிகை த்ரிஷா வீட்டில் மரணம்
Trisha Dog Zorro:"நடிகை த்ரிஷாவின் வளர்ப்பு நாயான ஸோரோ இறந்ததைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தத்தை வெளிப்படுத்தி பதிவிட்டுள்ளார்
த்ரிஷா
தமிழ் சினிமாவின் கடந்த 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிசா. சினிமா தவிர்த்து நாய்களின் மேல் அதீத பிரியம் கொண்டவர் த்ரிஷா. கடந்த பத்து ஆண்டுகளாக விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டாவில் உறுப்பினராக இருந்து வருகிறார். பல்வேறு தெரு நாய்க்களை தத்தெடுத்து வளர்த்து வரும் த்ரிஷா தனது ரசிகர்களையும் தெரு நாய்களை தத்தெடுத்து வளர்க்கும் படி அறிவுறுத்து வருகிறார். தனது வளர்ப்பு நாய்களை தனது பிள்ளைகள் என த்ரிஷா குறிப்பிடுவது வழக்கம்.
"என் மகன் இறந்துவிட்டான்" - த்ரிஷா
நடிகை த்ரிஷா ஹைதராபாத் படப்பிடிப்பின் போது ஒரு தெரு நாயை கண்டெடுத்தார். இந்த நாய்க்கு அவர் கேட்பரி என்று பெயர் வைத்தார். இது தவிர்த்து ஜனா , மற்றும் ஸோரோ என இரு நாய்களை அவர் வளர்த்து வந்தார். ஜனா கடந்த 2022 ஆம் ஆண்டு இறந்தது. கடந்த 12 ஆண்டுகளாக த்ரிஷா ஸோரோ என்கிற நாயவை வளர்த்து வருகிறார்.
View this post on Instagram
இன்று ஸோரோ இறந்துவிட்டதாக த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் " என் மகன் ஸோரோ இறந்துவிட்டான் . என்னை நன்றாக அறிந்தவர்களுக்கு இனி வாழ்க்கையில் எந்த அர்த்தமும் இல்லை என்று தெரியும். நானும் எனது குடும்பத்தினரும் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறோம். சில காலம் இடைவேளை எடுத்துக் கொள்ள இருக்கிறேன். " என த்ரிஷா பதிவிட்டுள்ளார்
View this post on Instagram